புஷ்பா 2 நெரிசல் ரசிகை மரண வழக்கு.. 11வது குற்றவாளி அல்லு அர்ஜுன்.. குற்றப்பத்திரிக்கையில் காவல்துறை
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது இயக்குநர் அட்லீ இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் படம் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 5 ஆம் தேதி வெளியானது. 4ஆம் தேதி இவரது நடிப்பில் வெளியான படமான புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சி திரையிடலின் போது ஏற்பட்ட நெரிசலில் ரேவதி என்ற இளம் தாய் மற்றும் அவரது மகன் சிக்கிக் கொண்டனர். இதில் ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில், சுய நினைவு இல்லாமல் இருந்த அவர் அதன் பின்னர் குணமாகி வீடு திரும்பினார்.
இந்த கோர சம்பவத்துக்கு காரணமே அல்லு அர்ஜுன் தான் என்றும், அவர் காவல்துறையிடம் தான் வருவதாக எந்த முன் தகவலும் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். முன் தகவல் அளித்திருந்தால் அதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு பணிகள் பல படுத்தப்பட்டிருக்கும். இது மட்டும் இல்லாமல் ஒரு உயிர் போயிருக்காது என்று தெரிவித்தனர்.

சிறை: இந்த வழக்கில் காவல்துறை தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து, அல்லு அர்ஜுனை கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அவரது இல்லத்தில் கைது செய்தது. மேலும் நீதிமன்றத்தில் அவரை சமர்பித்தபோது, நீதிமன்றம் அவரை 14 நாட்கள் காவலில் வைத்தது. இதனால் மொத்த ஆந்திராவும் தெலங்கானாவும் பதறிப் போனது. உடனே அவருக்கு ஜாமீன் வாங்கும் பணிகள் தொடங்கியது. ஆனாலும் நேரம் போதாத காரணத்தால் ஒரு நாள் இரவை சிறையில் கழித்தார் அல்லு அர்ஜுன். மேலும், சிறையில் அவருக்கு கொடுக்கப்பட்ட உணவை சாப்பிடவில்லை என்றும், தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தார் என்றும் தகவல்கள் அப்போது வெளியானது.
11வது குற்றவாளி: அதன் பின்னர் மறுநாள் காலையில் அதாவது டிசம்பர் 14ஆம் தேதி வெளி வந்தார் அல்லு அர்ஜுன். அன்றைய தினம் மொத்த தெலுங்கு சினிமாவும் அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றனர். இப்படி இருக்கும்போது இந்த வழக்கில் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட மொத்தம் 23 பேர் மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் அல்லு அர்ஜுன் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த தகவல் தற்போது இந்திய திரையுலகில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











