நடிக்கவே தெரியலைன்னு ராஷ்மிகாவை அசிங்கப்படுத்தினாரா அல்லு அர்ஜுன்.. கொளுத்திப் போட்ட பிரபலம்!
ஹைதராபாத்: புஷ்பா படத்தைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்திலும் அல்லு அர்ஜுன் உடன் ஜோடிப் போட்டு நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்நிலையில், சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட் செட்டிலேயே ராஷ்மிகாவை அல்லு அர்ஜுன் திட்டி விட்டதாக கிசுகிசு ஒன்று கிளம்பி உள்ளது.
ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படங்களிலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றது அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் தான்.

தமிழில் இந்த ஆண்டு விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தாலும், அந்த பம் ராஷ்மிகாவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
செம போல்டாக: இதற்கு முன் இல்லாத அளவுக்கு அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் படு போல்டாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மற்ற படங்களை விட ராஷ்மிகா நன்றாக நடித்தார் என்றால் அது புஷ்பா படத்தில் தான் என அவரது ரசிகர்களே கொண்டாட ஆரம்பித்தனர்.
சாமி சாமி பாடலில் பாவாடையுடன் ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி பொங்க நடித்தது ஒட்டுமொத்த ரசிகர்களை மிரட்டி எடுத்த நிலையில், அல்லு அர்ஜுன் உடன் காருக்குள் ரொம்பவே மோசமான காட்சியிலும் எல்லை மீறி நடித்திருந்தார்.

ராஷ்மிகாவை திட்டினாரா அல்லு அர்ஜுன்: சினிமா பிரபலங்கள் பற்றி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் விமர்சகர் மற்றும் சினிமா டிராக்கர் என சொல்லிக் கொள்ளும் உமைர் சந்து.
பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் என ஒருத்தரையும் விட்டு வைக்காமல் ஆபாசமாக பதிவிட்டு வரும் உமைர் சந்து புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பில், ராஷ்மிகா மந்தனா ஒழுங்காக நடிக்கவே இல்லை என அவரை அனைவர் முன்னிலையிலும் அசிங்கப்படுத்தி விட்டார் என ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

பெரிய பட்ஜெட்டில்: புஷ்பா முதல் பாகத்தை விட மிகவும் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக புஷ்பா 2 உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் போர்ஷன் முதல் பாகத்தை விட மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடித்து வரும் அனிமல் படத்திலும் ராஷ்மிகா மந்தனா தான் ஜோடியாக நடித்து வருகிறார். அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அனிமல் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











