அல்லு அர்ஜுனின் புஷ்பா டீசர் அப்டேட்... ஆயிரம் கோடி ப்ரீ ரிலீஸ் பிசினஸ்... ஷாக்கிங் ஆன ராஜமெளலி!

ஹைதராபாத்: டோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அல்லு அர்ஜுன், தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் 2023 இறுதிக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அர்ஜுன் ரெட்டி புகழ் சந்தீப் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன்.

இந்நிலையில், புஷ்பா இரண்டாம் பாகத்தின் டீசர், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

 புஷ்பா 2 ஷூட்டிங்

புஷ்பா 2 ஷூட்டிங்

அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021 டிசம்பரில் ரிலீஸான புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பைப் பெற்றது. பான் இந்தியா படமாக இந்தியா முழுவதும் ரிலீஸான புஷ்பா, 400 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது. அல்லு அர்ஜுனுடன் ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா 2 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

 அடுத்த மாதம் டீசர்

அடுத்த மாதம் டீசர்

செம்மரக் கடத்தலை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் படு மிரட்டலாக உருவாகி இருந்தன. புஷ்பா: தி ரூல் என்ற டைட்டிலில் உருவாகும் இரண்டாம் பாகத்திலும் அல்லு அர்ஜுனின் ஆக்‌ஷன் ட்ரீட்டுக்கு பஞ்சமிருக்காது என சொல்லப்படுகிறது. செகண்ட் பார்ட் முழுவதும் அல்லு அர்ஜுன் - ஃபஹத் ஃபாசில் இருவருக்கும் இடயேயான மோதல்கள் தான் அதிகம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், புஷ்பா 2 டீசர் அடுத்த மாதம் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

 1000 கோடி ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

1000 கோடி ப்ரீ ரிலீஸ் பிசினஸ்

ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜுன் தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு புஷ்பா 2 டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். முதல் பாகத்தில் பாடல்களிலும் பின்னணி இசையிலும் தெறிக்கவிட்ட தேவி ஸ்ரீ பிரசாத், புஷ்பா 2விலும் மரண மாஸ் காட்ட ரெடியாகிவிட்டாராம். ஆனால், சமந்தாவின் ஐட்டம் சாங் மட்டுமே இரண்டாம் பாகத்தில் மிஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே புஷ்பா 2 ப்ரீ ரிலீஸ் பிசினஸ் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

 ஷாக்கிங் ஆன ராஜமெளலி

ஷாக்கிங் ஆன ராஜமெளலி

புஷ்பா ஃபர்ஸ்ட் பார்ட் எவ்வித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ரிலீஸாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதனால், இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதனையடுத்து புஷ்பா 2 தியேட்டர் ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், ஓடிடி உரிமை உட்பட ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கவுள்ளதாம். ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் ப்ரீ ரிலீஸ் பிசினஸில் 900 கோடி வரை மட்டுமே வசூலித்தது.

 புஷ்பா 2 ரிலீஸ் தேதி

புஷ்பா 2 ரிலீஸ் தேதி

ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் என இரண்டு டாப் ஹீரோக்கள், ராஜமெளலி டைரக்‌ஷன் என இருந்தும் ஆர்.ஆர்.ஆர் 900 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. ஆனால், புஷ்பா 2வில் அல்லு அர்ஜுன் மட்டும் சோலோவாக களமிறங்கி ப்ரீ ரிலீஸ் பிசினஸ்ஸை எகிற வைத்துள்ளார். இது ராஜமெளலி மட்டுமின்றி டோலிவுட்டையே பதற வைத்துள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X