Allu Arjun: So Lovely.. அப்பானா சும்மாவா.. மகன் எழுதிய கடிதம்.. எமோஷனலான அல்லு அர்ஜுன்..!
ஹைதராபாத்: சமூக வலைதளமோ, இணையமோ எதைத் திறந்தாலும் இன்றைய ஹாட் டாபிக், புஷ்பா 2 படம் ரிலீஸ் தொடர்பாகத்தான். புஷ்பா 2 படத்தின் முதல் காட்சி முடிந்ததும் ஒரு பெண் ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடங்கி ரசிகர்கள் படத்தினைக் கொண்டாடி வருவது வரை செய்திகள் குவிந்த வண்ணம் உள்ளது. படம் பெரும்பான்மையான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சில ரசிகர்கள் படத்திற்கு ஆவரேஜ் மார்க் போட்டாலும், படத்தின் வசூலையோ, வெற்றியையோ பாதிக்கும் அளவிற்கு நெகடிவ் விமர்சனம் வரவில்லை. இப்படியான நிலையில் படம் ரிலீஸுக்கு முன்னர் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
புஷ்பா படம் அல்லு அர்ஜுன் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் என்றே கூறலாம். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த ஒரு படத்திற்காக மட்டும் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார் அல்லு அர்ஜுன். இதில் புஷ்பா 2 படத்திற்காக மட்டும் ரூபாய் 300 கோடிகள் சம்பளமாகப் பெற்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது. படம் கடந்த ஆகஸ்ட்டே வெளிவந்திருக்க வேண்டிய படம் என்றாலும், இப்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது படத்தின் மீது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே புஷ்பா 2 படம் குறித்து பேசும் அளவிற்கு இருந்திருக்காது.

மேலும் சோலோ ரிலீஸ் என்பது படத்தின் வசூலை பலமடங்கு பெருக்கித் தரும் என்பதால் படக்குழு சரியான நேரத்தில்தான் படத்தினை இறக்கியுள்ளது. இப்படியான நிலையில், படம் இன்று வெளியாகியுள்ளது. படம் ரிலீஸ்க்கு முன்னரே ரூபாய் 1000 கோடிகள் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் செய்துள்ளது. மேலும் படத்திற்கு புக்கிங் மற்றும் சிறப்புக் காட்சிகள், டிக்கெட் விலை உயர்வு என இருந்ததால், படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூபாய் 300 கோடிகள் இருக்கும் எனவும் படத்தின் மொத்த தியேட்டர் வசூல் அசால்ட்டாக, ரூபாய் 1500 கோடிகளைத் தொடும் எனவும் கூறப்படுகின்றது.

சாதனை: இந்நிலையில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகன் அயான், தனக்கு எழுதிய கடிதத்தை மிகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக, ஒரு அப்பாவாக நான் செய்த மிகப்பெரிய சாதனை இதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் உள்ளது. எனவே, எனது மகன் சின்ன குழந்தை எனவும், கடிதத்தில் அவனது எழுத்துப் பிழைகள் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள் எனவும் கேப்ஷன் இட்டுள்ளார்.

கடிதம்: அந்தக் கடிதத்தில், “ அன்புள்ள அப்பா, இந்தக் கடிதத்தை நான் எழுதக் காரணமே, உங்களை நினைத்து நான் எவ்வளவு பெருமைப்படுகின்றேன், உங்களால் நான் எவ்வளவு பெருமைப்படுகின்றேன் என்பதை உங்களிடம் கூறுவதற்காகத்தான். உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. குறிப்பாக சினிமாவிற்காக உங்களது அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, வெற்றி என அனைத்தும் என்னையும் பெருமைப்படுத்துகின்றது. நீங்கள் நெம்பர் 1 இடத்தில் இருக்கும்போது நான் உலகத்தின் உயரத்தில் பறப்பதைப்போல் உணர்கின்றேன்.

முதல் ரசிகன்: இன்று உலகத்தின் தலைசிறந்த நடிகரின் படமான புஷ்பா 2 ரிலீஸ் ஆகின்றது. இப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகின்றது. இதுமட்டும் இல்லாமல், இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி நான் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்ன நடந்தாலும் நீங்கள் தான் எனக்கு முன் உதாரணம், நீங்கள் தான் எனக்கு ஹீரோ. உங்களுக்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நான் எப்போதும் அவர்களில் முதன்மையானவனாக இருப்பேன். இதுமட்டும் இல்லாமல், நான் தான் உங்களின் முதல் ரசிகன்” என எழுதியுள்ளார். இந்தக் கடிதம் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











