Pushpa 2 The Rule: புஷ்பா 2 எஃபெக்ட்.. தியேட்டரில் சாமி ஆடிய பெண்.. திணறிய மக்கள்!

சென்னை: பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்து நேற்று தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது புஷ்பா 2 திரைப்படம். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் அம்மன் பாடலை பார்த்துக்கொண்டு இருந்த பெண் ஒருவருக்கு சாமி வந்து ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், நடிகை ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவான முதல் பாகத்தில் கூலித் தொழிலாளியாக லாரி டிரைவராக இருந்த அல்லு அர்ஜுன் அந்த காட்டுக்கே ராஜாவாகி, ஸ்ரீ வள்ளியை திருமணம் செய்து கொள்கிறான். புஷ்பாவால் நடந்த அவமானத்தை தாங்கமுடியாமல் பழிவாங்க துடித்துக் கொண்டிருக்கிறார் போலீஸ் அதிகாரி ஃபஹத் ஃபாசில். இந்த சூழ்நிலையில் முதல் பாகம் முடிவடைந்தது. இரண்டாவது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று தியேட்டரில் வெளியானது.

pushpa 2 allu arjun rasmika mandanna 2

படத்தின் கதை: செம்மரக்காட்டுக்கே ராஜாவாக இருக்கும் புஷ்பராஜ், அடுத்தடுத்த கடத்தலை செய்து பெயரையும் புகழையும் சம்பாதித்துவிடுகிறார். இந்த நேரத்தில், ஆந்திர முதல்வரை சந்திக்கும் வாய்ப்பு வர, அவரை சந்திக்க செல்கிறார். அப்போது, ஸ்ரீவள்ளி முதல்வருடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்து வரச் சொல்கிறார். ஆனால், முதல்வரோ புஷ்பா ஒரு கடத்தல்காரன் என்பதால் போட்டோ எடுக்க மறுத்துவிடுகிறார். இதனால், கடுப்பான புஷ்பா, எம்.பி சித்தப்பாவை முதல்வர் ஆக்குவதாக சபதம் ஏற்கிறார். அதன் பிறகு புஷ்பாவின் சபதம் நிறைவேறியதா? இல்லையா என்றும், ஃபஹத் ஃபாசிலுக்கும் புஷ்பாவுக்கும் இடையிலான மோதல் என்ன ஆனது என்பது படத்தின் கதை.

சாமி ஆடிய பெண்: 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் தமிழ்,தெலுங்கு,இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி உள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், கோயிலில் அம்மன் கெட்டப்புடன் புடவையை கட்டிக் கொண்டு, ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் அல்லு அர்ஜூன். கிளைமாக்ஸில் வரும் அந்த பாடல் மெய் சிலிர்க்கும் வகையில் இருந்தது. இந்த பாடலை தியேட்டரில் பார்த்துக்கொண்டு இருந்த பெண் ஒருவர் அருள் வந்து ஆடியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை கட்டுப்படுத்திய போதும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த சாமி ஆடிய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X