Pushpa 2 Ticket Price: ஆத்தி 1200 ரூபாயா?.. புஷ்பா 2 FDFS டிக்கெட் விலையை கேட்டீங்களா பாஸ்!

சென்னை: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா, சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏற்கனவே ஓவர்சீஸில் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று சொந்த ஊரான தெலங்கானாவில் டிக்கெட் புக்கிங்கை படக்குழு ஆரம்பித்துள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படமான புஷ்பா 2 படத்தின் டிக்கெட் புக்கிங் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் நாள் புஷ்பா 2 படத்தை பார்க்க அதிகபட்சமாக 1200 ரூபாயை செலவு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.

pushpa 2 allu arjun rashmika mandanna 2

இந்த வாரம் தமிழ்நாட்டில் புயல் பாதிப்புகளால் பல படங்கள் அடிவாங்கிய நிலையில், அடுத்த வாரம் மழை மற்றும் புயல் ஏதும் உருவாக வாய்ப்பில்லை என்றும் புஷ்பா 2 திரைப்படம் கெத்தாக வெளியாகி இங்கேயும் வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.

புஷ்பா 2 சான்றிதழ்: அளவுக்கு மீறிய வன்முறை காட்சிகள், ஐட்டம் பாடல்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், பெரிய நடிகர்கள் படங்களை குடும்பத்துடன் வந்து பார்க்கும் விதமாக யு/ஏ சான்றிதழ்களை எப்படியாவது வாங்கிவிடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டுகளை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர். மேலும், புஷ்பா 2 படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் என்றும் கூறுகின்றனர்.

டிக்கெட் புக்கிங் ஆரம்பம்: அல்லு அர்ஜுனின் ஹோம் கிரவுண்டான தெலங்கானாவில் புஷ்பா 2 படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று ஆரம்பமாகி உள்ளது. அடித்து பிடித்துக் கொண்டு ரசிகர்கள் முதல் நாள் முதல் ஷோவுக்கான டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் அதிகளவில் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகளும் வேகமாக விற்பனையாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

pushpa 2 allu arjun rashmika mandanna 2

1200 ரூபாயா?: புஷ்பா 2 படத்தின் ப்ரீமியர் காட்சிக்கான டிக்கெட் விலை 1200 ரூபாய் என்றும் பிவிஆர், ஐநாக்ஸ், சினி போலிஸ் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட்டுகளின் விலை 531 ரூபாய் என்றும் சிங்கிள் ஸ்க்ரீன் கொண்ட தியேட்டர்களில் ஒரு டிக்கெட் விலை அதிகபட்சம் 354 ரூபாய் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 500 கோடி பட்ஜெட்டில் புஷ்பா 2 எடுக்கப்பட்ட நிலையில், முதல் நாளிலேயே 200 கோடி ரூபாய் வசூலை டார்கெட் செய்திருப்பதாகவும் அதிகபட்சமாக 1500 கோடி வரை படம் வசூல் செய்யும் என்றும் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X