யாஷை மனம் திறந்து பாராட்டி அல்லு அர்ஜுன்… என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : ஒருவரை பாராட்டவும் நல்லமனசு வேணும்னு சொல்லுவாங்க அந்த மனுசு நம்ம டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜூனுக்கு நிறையவே இருக்குனு அவரது ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் அல்லு அர்ஜுன்.

இவர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியா முழுவதும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்து. அல்லு அர்ஜுனின் புகழை உலகம் அறிய செய்தது.

புஷ்பா

புஷ்பா

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா தி ரைஸ். இந்த படம் தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி என பான் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும், பேச்சும் தூள் கிளப்பி இருக்கும்.

பான் ஸ்டார்

பான் ஸ்டார்

படம் முழுக்க தோள்பட்டையை இறக்கிக் கொண்டு இவர் பேசிய வசனத்திற்கே ஏகப்பட்ட இளசுகள் இவர் பின்னால் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள். டோலிவுட்டை வளைத்து போட்டிருந்த அல்லு அர்ஜூன் தற்போது பான் ஸ்டாராகி உள்ளார். புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

யாஷின் மிரட்டலான நடிப்பு

யாஷின் மிரட்டலான நடிப்பு

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் தனது ட்விட்டரில், கே.ஜி.எஃப் 2 படக்குழுவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.அதில், யாஷ் நடிப்பு மிரட்டலாக இருந்தது. சஞ்சய் தத், ரவீணா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உட்பட அனைவரும் நடிகர்களின் நடிப்பும் ஈர்க்கும்படி இருந்தது. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் அருமை. படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இயக்குநர் பிரசாந்த் நீல், கேஜிஎஃப் படத்தை சிறப்பாக படமாக்கி இருக்கிறார். சிறந்த சினிமா அனுபவத்தைத் தந்ததற்காகவும் இந்திய சினிமா கொடியை உயரத்தில் பறக்க விட்டதற்காகவும் நன்றி என்று கூறியுள்ளார்.

மிகவும் நன்றி

மிகவும் நன்றி

அல்லு அர்ஜூனின் பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ள யாஷ், நன்றி அல்லு அர்ஜூன், உங்களின் கடின உழைப்பு மற்றும் நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் என்று யாஷ் ரீட்விட் செய்துள்ளார்.

அவரால் மட்டுமே முடியும்

அவரால் மட்டுமே முடியும்

இவர் இருவரது பதிவை பார்த்த ரசிகர்கள், ஒரு நடிகரே மற்றொரு நடிகரை பாராட்டுவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும். இப்படி மனம் திறந்து பாராட்ட அல்லு அர்ஜூனால் மட்டும்தான் முடியும் என்றும் ரசிகர்கள் இணையத்தில் கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X