துணை நடிகை தற்கொலை.. ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய புஷ்பா பட நடிகர் கைது!

சென்னை: துணை நடிகையை ஆபாசமாக புகைப்படம் எடுத்து தற்கொலைக்கு தூண்டிய புஷ்பா பட நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

முப்பதே வயதான ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி மல்லேஷம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகரானார். இதைத்தொடர்ந்து ஜார்ஜ் ரெட்டி, பலாசா 1978, புஷ்பா,பிக்பாக்கெட், புட்டபொம்மா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Pushpa actor Jagadeesh prathap bandari was arrested on charges of abetment to suicide of a junior artiste

புஷ்பா தி ரைஸ்: நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனின் நண்பனாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மொத்த கதையையும் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி சொல்லுவது போல உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தற்போது உருவாகி வரும் புஷ்பா2 படத்திலும் நடித்து வருகிறார்.

துணை நடிகையுடன் உறவு: இந்நிலையில், ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி துணை நடிகை ஒருவருடன், லிவ்விங் டூகெதர் உறவில் சில காலம் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்துவிட்டனர்.

Pushpa actor Jagadeesh prathap bandari was arrested on charges of abetment to suicide of a junior artiste

மிரட்டிய நடிகர்: இதனையடுத்து அந்த நடிகைக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் நெருங்கி பழகி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனை ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி மறைமுகமாக தனது செல்போனில் படம் எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக அந்த பெண்ணை, மிரட்டியதாக கூறப்படுகிறது.

நடிகர் கைது: இதனால் மனமுடைந்த அந்த துணை நடிகை, கடந்த 29ம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஐதராபாத் பஞ்சகுட்டா போலீசார் 306 இன் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புதன்கிழமை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஜெகதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X