பண்டிகை நாளில் ஒரே நேரத்தில் மோதும் புஷ்பா, கேஜிஎஃப் 2... ஸ்க்ரீன் கிழிய போகுது!

சென்னை : இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட திரைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ரிலீசாக தயாராகி கொண்டுள்ளது.

அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல கேஜிஎஃப் பாகம் இரண்டும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் புஷ்பா மற்றும் கே ஜி எஃப் 2 அடுத்து வரும் பண்டிகை நாளில் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

பண்டிகை காலங்களில்

பண்டிகை காலங்களில்

பண்டிகைக் காலங்கள் என்றாலே பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் மோதுவது சகஜமான ஒன்றுதான் ஆனால் இந்த முறை கொரோனா தாக்கம் காரணமாக பல திரைப்படங்கள் வெளியீட்டு தேதியை தள்ளி போட்டு உள்ள காரணத்தினால் இனிவரும் பண்டிகை காலங்களில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆந்திர வனப்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக செம்மரக் கடத்தல் செய்யப்படுவதை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

மின்னல் வேகத்தில் சண்டை

மின்னல் வேகத்தில் சண்டை

இதுவரை ஸ்டைலிஷான பல கதாபாத்திரங்களில் நடித்து வந்த அல்லு அர்ஜுன் இதில் கரடுமுரடான கெட்டப்பில் லாரி டிரைவராக நடித்துள்ளார் . சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி இணையதளத்தில் கொண்டாடப்பட்டது. மின்னல் வேகத்தில் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்க சண்டை காட்சிகள் பார்க்கும் அனைவரையும் நடுநடுங்க செய்துள்ளது . தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி புஷ்பா திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் கட்டமாக புஷ்பா பஃர்ட் 1 கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ராட்சத செட் அமைக்கப்பட்டு

ராட்சத செட் அமைக்கப்பட்டு

ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த கேஜிஎஃப் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது அதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பிரசாத் நீல் இரண்டாவது பாகத்தையும் இயக்கி வருகிறார். நடிகர் யஷ் அதே ராக்கி பாய் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். முதல் பாகம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. அதேபோல இரண்டாவது பாகமும் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அதற்காக ராட்சத செட் அமைக்கப்பட்டு கர்நாடக மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது

வில்லனாக

வில்லனாக

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடிக்க இருப்பதால் பாலிவுட் ரசிகர்களிடமும் இந்த படம் தனி கவனத்தை பெற்றுள்ளது. ஜூலை மாதமே கேஜிஎஃப் 2 படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டதால் தேதியை தள்ளி வைத்தது. இந்த நிலையில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிவைத்து கேஜிஎஃப் 2ஆம் பாகத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு

கிறிஸ்மஸ் பண்டிகைக்கு

சாதாரணமாகவே பண்டிகை நாட்களில் குறைந்தபட்சம் நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களாவது வெளியாகி கல்லா கட்டிவிடும். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள படங்களை ரிலீஸ் செய்ய அனைவரும் தயாராகிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் புஷ்பா மற்றும் கே ஜி எஃப் 2 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிடப் படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால் வசூலில் இந்த இரண்டில் எந்த திரைப்படம் அதிக அளவு செய்யும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக சண்டையிட்டு கொண்டுள்ளனர்.

வியாபார உத்தி

வியாபார உத்தி

திரைப்பட வெளீயிடு என்று வரும் போது எத்தனை தியேட்டர்கள் , எத்தனை வகை ப்ரமோஷன்ஸ் என்று தான் எல்லா தயாரிப்பாளர்களும் யோசிப்பார்கள் . புஷ்பா மற்றும் கே ஜி எஃப் 2 இரண்டு படமுமே மிக பெரிய எதிர்பார்ப்பு கொண்ட படங்கள் என்பதால் படத்தின் தாக்கம் எவ்வளவு விரைவாக மக்கள் மனதில் சென்று அடைகிறதோ அவ்வளவு சீக்கிரம் வெற்றியின் சுவையை ஒரு தயாரிப்பாளர் கண்டு மகிழலாம் . விரைவில் இந்த இரண்டு படமுமே வெளிவந்து மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என்பது தான் அனைவரது ஆசையும் கூட. அதே சமயம் வெவேறு தேதிகளில் வந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பது பல முக்கிய சினிமா பிரபலங்கள் அனுபவஸ்தர்கள் கூறும் கருத்து . பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் இந்த படங்களின் வெளியீடு தேதியை தீடீர் என்று மாற்றி கூட அறிவிக்கலாம் . எல்லாம் நன்மைக்கே என்று நல்ல சினிமா ஒரு நல்ல ரசிகனை எப்போதும் பூர்த்தி அடைய செய்யும் .

அதிரடி சண்டை

அதிரடி சண்டை

நடிகர் யஷ்ஷின் ராக்கி பாய் கதாபாத்திரம் மீதும் அந்த வசனங்களை ஏற்படுத்தும் பாதிப்பும் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை .அம்மா செண்டிமெண்ட் காலம் காலமாக ஜெயிக்கும் என்று மீண்டும் மீண்டும் நிரூபணம் செய்த படம் கே ஜி எஃப். அந்த வகையில் கே ஜி எஃப் 2 படத்திலும் மிரட்டனான வசனங்கள் மற்றும் அதிரடி சண்டை காட்சிகள் , ஏழ்மையின் வலி அம்மா பாசம் போன்ற அனைத்தையும் ஒன்றாக பிணைந்து பக்கா கமர்சியல் ட்ரீட் கொடுக்க தயாரிகின்றனர் . புஷ்பா திரைப்படம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் ஒன்னும் சளைக்கவில்லை . மிகவும் கடுமையான போட்டி இருந்தாலும் சபாஷ் சரியான போட்டி என்றே சொல்லலாம் .
மாடர்ன் உடையில் குத்தாட்டம் போட்ட ஹேமாவை பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X