தியேட்டரில் 50 நாட்களை கடந்த அல்லு அர்ஜுனின் புஷ்பா.. அதிகாரப்பூர்வ வசூல் எவ்வளவு தெரியுமா?
சென்னை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியானது புஷ்பா திரைப்படம்.
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்டை புஷ்பா படக்குழுவினரே அறிவித்துள்ளனர்.

இந்தியிலும் ஹிட்
அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி இந்தியிலும் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. கடந்த ஆண்டும் பாலிவுட்டில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய படங்கள் வராத நிலையில், புஷ்பா படத்தின் இந்தி வெர்ஷன் வசூல் வேட்டை நடத்தியது.

50 நாட்கள்
ஒடிடி தளத்தில் வெளியானாலும் தியேட்டரிலும் தொடர்ந்து புஷ்பாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வெற்றிகரமாக தியேட்டரில் 50 நாட்களை புஷ்பா படம் கடந்துள்ளதாக புதிய போஸ்டருடன் அந்த படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்கிற அறிவிப்பையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

சமந்தாவின் ஓ சொல்றியா
புஷ்பா திரைப்படம் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற நடிகை சமந்தாவின் ஓ சொல்றியா பாடலும் ஒரு காரணம் என்கின்றனர். ஏற்கனவே தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் ராஜியாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்ற சமந்தா இந்த படத்தில் செம குத்தாட்டம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

365 கோடி வசூல்
நடிகர் அல்லு அர்ஜுனின் அதிரடியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான புஷ்பா வெளியான 50 நாட்களில் உலகளவில் மொத்தம் 365 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக போஸ்டர் அடித்து வெளியிட்டுள்ளனர். சில நடிகர்களின் படங்கள் 100 கோடி போஸ்டரை ஒட்டவே தயங்கி வரும் நிலையில், 365 கோடி வசூல் என வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
Recommended Video

பொய் கணக்கு
புஷ்பா இரண்டாம் பாகத்தை ஓட வைக்கத்தான் இப்படி இஷ்டத்துக்கு பூ சுற்றி வருகிறது தயாரிப்பு நிறுவனம் என்றும் ஒரிஜினல் வசூல் 245 கோடி தான் என்றும் ஃபேக் ரிப்போர்ட்டை போட்டு புஷ்பா தி ரூல் படத்துக்கான ஹைப்பை எகிற வைக்கும் முயற்சி இது என டோலிவுட் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதற்கு அல்லு அர்ஜுன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











