ராஜமௌலியை வானளாவி புகழ்ந்து தள்ளிய இயக்குனர்... உங்களுக்கும் எங்களுக்கும் ஆன வித்தியாசம் இது தான்.
கடந்த 25 ஆம் தேதி உலக அளவில் திரையரங்குகளில் ரிலீசான RRR திரைப்படம் அனைத்து மக்களின் ஆதரவோடு வெற்றி நடைபோடுகிறது. திரையிட்ட இடங்களிலெல்லாம் வசூல் மழை கொட்டுகிறது.
பாகுபலி 2 படத்திற்கு பிறகு எஸ்எஸ் ராஜமவுலி இயக்கும் படம் RRR. தெலுங்கின் இரண்டு முன்னணி ஹீரோக்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கதாநாயகர்களாக நடித்த இந்த படத்தின் பட்ஜெட் 500 கோடி என சொல்லப்படுகிறது.
திரையரங்குகளில் படம் பார்த்த மக்கள் ஒருபுறம் வாழ்த்து மழையில் ராஜமௌலியை புகழ, மறுபுறம் இந்திய சினிமாவின் பல முக்கிய பிரமுகர்கள் அவரை புகழ்ந்து வருகிறார்கள். அவரது போட்டியாளராக கருதப்படும் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் ராஜமௌலியை RRR படத்திற்காக வெகுவாக பாராட்டியுள்ளார்.

முதல் நாள் வசூலில் சாதனை
இந்திய அளவில் ரிலீஸாகி முதல் நாள் அதிகம் வசூல் செய்த படம் எனும் சாதனை படைத்திருக்கிறது RRR. இதற்கு முன் பாகுபலி 2 படம் செய்த சாதனையை RRR திரைப்படம் முறியடித்திருக்கிறது. இதையடுத்து மூன்றாவது இடத்தை 2.O படம் பிடித்துள்ளது. ரஜினி கதாநாயகனாக நடிக்க டைரக்டர் ஷங்கர் இயக்க லைகா புரொடக்ஷன்ஸ் அதை தயாரித்தது.

கலவையான விமர்சனம்
RRR படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் சூப்பர்ஹிட் என பேச்சு வருகிறது. ராஜமௌலி இன்னொரு முறை தான் ஒரு அசாத்திய இயக்குனர் என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளார். இது ஒருபுறமிருக்க சில கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கிறது. பாகுபலி படம் அனைவரிடமும் ஏற்படுத்திய பாசிட்டிவ் தாக்கம் RRR பணம் ஏற்படுத்தவில்லை எனும் சிலரது கருத்து ஓங்கி ஒலிக்கிறது. படத்தின் சில காட்சிகள் கார்ட்டூன் படத்தில் வருவதைப் போல இருப்பதாக சொல்லப்படுகிறது. சில குறைகள் இருந்தாலும் படம் ஹிட் என்று சொல்லப்படுகிறது.

பிரபலங்கள் வாழ்த்து
RRR படத்தைப் பார்த்த சினிமா பிரபலங்கள் பலர் ராஜமௌலியின் மேக்கிங்கை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். " Master story teller " என தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டியுள்ளார். " இந்திய சினிமாவின் பெருமை " என அல்லு அர்ஜுன் எஸ்எஸ் ராஜமவுலி புகழ்ந்துள்ளார் மேலும் " இந்திய சினிமாவை பெருமை படுத்தியதற்கு நன்றி " என குறிப்பிட்டுள்ளார்.

புஷ்பா இயக்குனர் புகழாரம்
தெலுங்கில் ராஜமௌலிக்கு தற்போது இருக்கும் இயக்குனர்களில் அவருக்கு இணையான ஒருவர் புஷ்பா படத்தை இயக்கிய சுகுமார். RRR படம் பார்த்து அவர் ராஜமௌலிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் " நீங்க பக்கத்துல இருந்தாலும் உங்களை பிடிக்க நாங்க ஓடணும். நாங்க ஆகாயத்தில் இருந்தாலும் உங்கள பாக்க தலையை தூக்கணும். ராஜமௌலி சார், உங்களுக்கும் எங்களுக்கும் ஒரே வித்தியாசம், இது போன்ற படங்களை நீங்க எடுப்பீர்கள் நாங்கள் பார்ப்போம் அவ்வளவுதான் என நெகிழ்ச்சியாக பாராட்டியுள்ளார். நேற்று கேஜிஎப் 2 படத்தின் டிரைலர் ரிலீஸின்போது அந்த படத்தின் இயக்குனர் மற்றும் படத்தின் ஹீரோ ராஜமவுலி பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











