ரீல் ஹீரோ அல்ல நிஜத்திலும் ஹீரோதான்…அல்லு அர்ஜூனை பாராட்டும் ரசிகர்கள்!

கேரளா : கேரள மாணவிக்கு நர்சிங் படிக்க உதவி செய்த அல்லு அர்ஜூனை அவரது ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

நடிகர் அல்லு அர்ஜுன் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பால் தெலுங்குத் திரையுலகில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

இவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்ததால், இவர் எவர்கிரீன் சூப்பர் ஹிட் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

அல்லு அர்ஜூன்

அல்லு அர்ஜூன்

கடந்த ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் ரிலீசான புஷ்பா படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்த படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பு, பேச்சு, பாடி லாங்வேஜ் என அனைத்தும் மாஸாக இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பில்

விறுவிறுப்பான படப்பிடிப்பில்

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து கமர்சியலாக உருவான புஷ்பா படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 500 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து புஷ்பா 2 படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக ஆரம்பமாகி உள்ளன. நடிகர் அல்லு அர்ஜுனின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகின. அடுத்த ஆண்டு இறுதிக்குள் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மனசு தான் சார் கடவுள்

இந்த மனசு தான் சார் கடவுள்

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் நர்சிங் படிப்பை தொடர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த கேரள மாணவிக்கு அல்லு அர்ஜுன் உதவிக்கரம் நீட்டி உள்ளார். பனிரெண்டாம் வகுப்பில் 92 சதவீத மதிப்பெண்கை மாணவி, கடந்த ஆண்டு தந்தை கொரோனாவால் இறந்ததால், மேல்படிக்கு பணம் இல்லாததால், தனது படிப்பைத் தொடர முடியாமல் போனது. இதைடுத்து,அந்த மாணவியின் நான்கு ஆண்டு படிப்புக்கான அனைத்து செலவுகளை அல்லு அர்ஜுன் ஏற்றுக்கொண்டுள்ளார்.

நிஜத்திலும் ஹீரோ தான்

நிஜத்திலும் ஹீரோ தான்

அல்லு அர்ஜுனின் உன்னதமான செயலை ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். இந்த தகவலை கேள்விப்பட்ட அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் நீங்கள் ரீல் ஹீரோ மட்டும் இல்லை நிஜத்திரும் ஹீரோ தான் என அஅவரை வெகுவாக புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள். அல்லு அர்ஜூன் உதவிக்கரம் நீட்டியதை அடுத்து பல கல்லூரிகளில் இருந்து அந்த மாணவிக்கு அழைப்பு வந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X