தளபதியின் அடுத்த படத்தில் இணையும் பிரபல நாயகி... அப்போ கீர்த்தி சுரேஷ்?

சென்னை : இளைய தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தனது 66 படத்தின் சூட்டிங்கில் விரைவில் விஜய் இணையவுள்ளார்.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வேறு நாயகி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

தளபதி விஜய் தனது பீஸ்ட் படத்தின் சூட்டிங்கையும் டப்பிங்கையும் முடித்துக் கொடுத்துள்ளார். படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து எஞ்சிய சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய் வெளிநாட்டு பயணம்

விஜய் வெளிநாட்டு பயணம்

இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொடுத்துள்ள நடிகர் விஜய் தொடர்ந்து குடும்பத்துடன் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுற்றுலாவை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் அவர் அடுத்ததாக தனது 66வது படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

விஜய் 66 படம்

விஜய் 66 படம்

வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகவுள்ள விஜய்யின் 66வது படமான அந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ளது. இதன்மூலம் முதல் முறையாக தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் இணைகிறார். விரைவில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

விஜய்யுடன் இணையும் ராஷ்மிகா?

விஜய்யுடன் இணையும் ராஷ்மிகா?

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா நடித்து வெளியாகியுள்ள புஷ்பா படம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது.

Recommended Video

கைநழுவும் பெரிய படங்கள்? Cook With Comali Ashwin-க்கு வந்த சோதனை | Enna Solla Pogirai
விஜய்யுடன் இணைய விருப்பம்

விஜய்யுடன் இணைய விருப்பம்

இந்நிலையில் அடுத்ததாக விஜய் ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே தான் விஜய் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை ராஷ்மிகா மேடைகளில் தெரிவித்து வந்துள்ள நிலையில், தற்போது அவரது விருப்பம் நிறைவேறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X