புஷ்பா படத்தின் 3வது சிங்கிள் ரிலீஸ் அப்டேட் வெளியானது!
சென்னை : நடிகர் அல்லு அர்ஜுன் இப்பொழுது இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் புஷ்பா.
ராஷ்மிகா மந்தனா இதில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகர் பகத் பாசில் இதில் வில்லனாக நடித்து வருகிறார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள புஷ்பா படத்திலிருந்து மூன்றாவது சிங்கிள் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

புஷ்பா ராஜ் என்ற கதாபாத்திரத்தில்
ரங்கஸ்தலம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சுகுமார் இப்போது புஷ்பா படத்தை இயக்கி வருகிறார் இதில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடமே தொடங்கப்பட்டு கொரோனா சூழல் காரணமாக தொடர்ந்து தடைப்பட்டு வந்தது. இப்பொழுது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறு வேகத்தில் நடைபெற்று கொண்டுள்ளது. இதில் அல்லு அர்ஜுன் புஷ்பாராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி டிரைவராக நடிக்கிறார்.

பகத் பாசில் வில்லனாக
அதிரடியான ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக யாரை நடிக்க வைக்க போகிறார்கள் என்ற மிகப்பெரிய சஸ்பென்ஸ் இருந்து வந்தது. விஜய் சேதுபதி, ஆர்யா, ஆதி என பலர் வில்லனாக நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன. கடைசியாக மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பகத் பாசில் மொட்டையடித்துக் கொண்டு மிகவும் வித்தியாசமான வில்லனாக நடித்துள்ளார்.

வில்லேஜ் கதாபாத்திரத்தில்
தன்னுடைய க்யூட்டான எக்ஸ்ப்ரஷன்களின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

3வது சிங்கிள் "சாமி சாமி"
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள புஷ்பா இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் டிசம்பர் மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி சக்கைபோடு போட்டது இந்த நிலையில் புஷ்பா படத்திலிருந்து மூன்றாவது பாடல் குறித்த சூப்பர் அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி மூன்றாவது சிங்கிள் "சாமி சாமி" வரும் அக்டோபர் 28ஆம் தேதி காலை 11:07 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து உள்ளார்.


Click it and Unblock the Notifications











