முகத்தை வைத்து ஆபாச மார்பிங்.. மன உளைச்சலில் புஷ்பா பட நடிகை.. 42 பேர் மீது புகார்!
சென்னை: பிரபல நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான நடிகை அனசூயா பரத்வாஜ், AI மூலம் தன்னை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் புகைப்படத்தை வெளியிட்ட 42 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் ட்ரோலிங், முகத்தை மாற்றி மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படங்கள், AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாக அனுசுயா ஏற்கனவே எச்சரித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் இந்த புகாரை அளித்துள்ளார்.
அனுசுயா அளித்த புகாரில், தன்னை சாதாரணமாக ட்ரோல் செய்வதோடு மட்டுமல்லாமல், பாலியல் ரீதியான கருத்துகள், மிரட்டல்கள் மற்றும் ஆபாசமான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பரப்பி, தனது பெயருக்கும் மரியாதைக்கும் களங்கம் விளைவிக்க முயற்சிக்கிறார்கள். குறிப்பாக, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மார்ஃப் செய்யப்பட்ட வீடியோ ஆபாசமாக உள்ளது. இதனால், நான் மனரீதியாக உளைச்சலுக்கு என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

புஷ்பா பட நடிகை: நடிகை அனுசுயா அளித்த புகாரை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் இந்த விவகாரத்தில் 42 நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய குற்றச்சட்டப்படி (IPC) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) ஆகியவற்றின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை பாலியல் தொந்தரவு, அவதூறு மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பான மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளாகும்.
சர்ச்சையின் பின்னணி: நடிகை அனுசுயா சர்ச்சையில் சிக்குவதற்கு காரணம் சமீபத்தில் நடைபெற்ற 'தண்டோரா' பட நிகழ்ச்சியில், நடிகர் சிவாஜி, என்ன இவர் இப்படி பேசுகிறாரே என்று என்னை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. உங்கள் அழகு சேலையில்தானே தவிர, உடல் பாகம் தெரியும்படி ஆடை அணிவதில் இல்லை. பெண்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுதரந்திரத்தை புரிந்து கொண்டு, அந்த சுதந்திரத்தை ஆடையில் காட்டி வருகிறார் என்று பேசி இருந்தார். அவரின் இந்த கருத்து பெண்களுக்கு விரோதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அப்போது, நடிகை அனுசுயா, சிவாஜியின் பேச்சை வன்மையாக கண்டித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில். யார் என்ன உடையணிய வேண்டும் என்று அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆடை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், சிவாஜியின் மனநிலையை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்


Click it and Unblock the Notifications











