ஒரே வாரத்தில் 229 கோடியை கடந்து தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வரும் புஷ்பா!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுனின் ராவான நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா
ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போடுகிறது. இந்த நிலையில் புஷ்பா ரிலீசான முதல் வாரத்திலேயே சுமார் 229 கோடியை கடந்து வசூல் வேட்டை நடத்தி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

செம்மரக்கடத்தலை மையமாகக் கொண்டு
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெறுகிறது. அந்த வகையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் இப்போது வெறித்தனமாக உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா. செம்மரக்கடத்தலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் என்ற கதாபாத்திரத்தில் லாரி டிரைவராக நடித்துள்ளார்

ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக
தென்னிந்தியாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா இப்போது பாலிவுட்டில் படு பிசியாக நடித்து வர புஷ்பா படத்தில் முதல்முறையாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து பட்டையைக் கிளப்பியுள்ளார் . சமந்தா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் போட்டி போட்டுக்கொண்டு இந்த படத்திற்காக கவர்ச்சியை அள்ளித் தெளித்து உள்ளனர்

சமந்தாவின் கிறங்க வைக்கும் நடனம்
குறிப்பாக இந்த படத்தில் ஸ்ரீ பிரசாத் இசையில் ஊஊ சொல்றியா மாமா பாடலில் சமந்தாவின்
கிறங்க வைக்கும் நடனம் எல்லாரையும் படத்தை பார்க்கப்பார்க்க மிகப்பெரிய முக்கிய காரணமாக உள்ளது. ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புஷ்பா இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது அதில் முதல் பாகம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video

ஒரே வாரத்தில் 229 கோடி வசூல்
தமிழில் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியான புஷ்பா திரையரங்கில் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடைபோடுகிறது. பல்வேறு வசூல் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த புஷ்பா திரைப்படம் இப்பொழுது புதிய சாதனை படைத்துள்ளது. வெளியான ஒரே வாரத்தில் உலக அளவில் இந்த படம் 229 கோடி இதுவரை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் ரசிகர்களிடையே புஷ்பா படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து அல்லு அர்ஜுன் மிக விரைவிலேயே நேரடி தமிழ்த் திரைப்படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











