க்ளைமாக்சில் நிர்வாண காட்சிகளை ப்ளான் செய்த புஷ்பா படக்குழுவினர்... வெளிப்படுத்திய இயக்குநர்!

சென்னை : நடிகர் அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா லீட் கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள படம் புஷ்பா.

Recommended Video

நான் பிறந்த ஊர்ல என்ன இப்படி ரசிக்குறாங்க! | Allu Arjun speech in Pushpa Success Meet

இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதிலும் படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்து படத்தின் இயக்குநர் சுகுமாரன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

புஷ்பா படம்

புஷ்பா படம்

நடிகர் அல்லு அர்ஜுன், பகித் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரத்தில் வெளியான படம் புஷ்பா. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. ஆயினும் படம் வெளியான இடத்தில் எல்லாம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

இரண்டு பாகங்கள்

இரண்டு பாகங்கள்

படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் பாகம் வெளியாகியுள்ளது. மரக்கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் தற்போது வெளியாகியுள்ளது. படத்தை இயக்கியுள்ளார் சுகுமார்.

சர்ச்சைக்குள்ளான காட்சிகள்

சர்ச்சைக்குள்ளான காட்சிகள்

படத்தில் பல காட்சிகள் மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் சமந்தாவின் நடனம் உள்ளிட்டவை படத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர்.

சர்ச்சைக்குள்ளான சமந்தா நடனம்

சர்ச்சைக்குள்ளான சமந்தா நடனம்

குறிப்பாக சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய நடனம் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. ஆண்களை இந்தப் பாடல் கொச்சைப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து வழக்குகளும் போடப்பட்டன. ஆனால் இவை குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் படம் சிறப்பாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

க்ளைமாக்ஸ் குறித்த இயக்குநர் கருத்து

க்ளைமாக்ஸ் குறித்த இயக்குநர் கருத்து

இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் சுகுமார் தனது கருத்துக்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அதில் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி குறித்து அவர் சீக்ரெட் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

நிர்வாண காட்சிகளுக்கு திட்டம்

நிர்வாண காட்சிகளுக்கு திட்டம்

படத்தின் க்ளைமாக்ஸில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் இருவரும் சண்டையிடுவது போல காட்சி அமைந்துள்ளது. இதில் முதலில் இருவரும் நிர்வாணமாக சண்டையிடுவது போல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் ரசிகர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதால் இருவரும் டவுசர் அணிந்து சண்டையிடுவது போல காட்சியை மாற்றி அமைத்ததாகவும் சுகுமார் கூறியுள்ளார்

சர்ச்சைக்குள்ளான பாடல்

சர்ச்சைக்குள்ளான பாடல்

இந்தப் படத்தின் ஓ சொல்றியா மாமா பாடல் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக சித்தரித்தது இழிவாக எழுதப்பட்டுள்ளதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்த நிர்வாண காட்சிகளும் இடம்பெற்றிருந்தால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி படம் படுதோல்வியை சந்தித்திருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X