Don't Miss!
- News
கம்பி எண்ணும் கணவன்! சிறைக்கு விசிட் அடித்தபோது சிக்கிய முகிலா! பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்..!
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Technology
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 'இந்த' திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு பிரச்சனை இருக்காது! எந்த திட்டம்
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2 நாளில் ரூ.100 கோடி வசூல்... அல்லு அர்ஜுன் கேரியரில் சிறப்பான முதல் படம்!
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூன், பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் புஷ்பா.
இந்தப் படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
ரொம்ப அவமானமா இருக்கு சார்...எதற்காக பிரியங்கா இப்படி சொன்னார் ?
இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டு நாட்களின் கலெக்ஷன் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜூன், பகத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கியுள்ள இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள நிலையில் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு
மரக்கடத்தல் மற்றும் அதைத்தொடர்ந்து சாதாரண ஆள் டான் ஆக மாறுவது என்ற கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான இந்தப் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

பாடலுக்கு சமந்தா நடனம்
படத்தில் சமந்தா அல்லு அர்ஜூனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதும் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்தப் பாடல் கண்டனத்திற்கு உள்ளானதுடன் பாடலின்மீது வழக்கும் போடப்பட்டுள்ளது. ஆண்களுக்கு எதிராக இந்தப் பாடல் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கலவையான விமர்சனங்கள்
இந்நிலையில் படத்தின் முதல்பாதி சிறப்பாக இருந்ததாகவும் இரண்டாம் பாகம் சிறிது மொக்கையாக நகர்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆயினும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியான இந்தப் படம் வசூல் மழையை பொழிந்து வருகிறது.

ரூ 100 கோடி க்ளப்பில் இணைந்தது
முதல் நாளிலேயே 40 கோடியை உலகளவில் வசூல்செய்த இந்தப் படம் இரண்டு நாட்களிலேயே 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது. இதையொட்டி தயாரிப்பு தரப்பு தற்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளது. முன்னதாக அல்லு அர்ஜூனின் படங்களின் வசூல் சாதனையை புஷ்பா படம் தற்போது முறியடித்துள்ளது.

71 கோடி ரூபாய் வசூல்
படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. படம் முதல் நாளில் 40 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் முதல் நாளிலேயே உலகளவில் 71 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.