புஷ்பா படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய அந்த காட்சி அதிரடி நீக்கம்.. ஏன் இப்படி எல்லை மீறுறாங்க?

ஹைதராபாத்: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை ஆடி வரும் புஷ்பா படத்தின் அந்த ஆபாசமான காட்சி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராவாக படங்கள் எடுக்கிறேன் என்கிற பெயரில் பல இயக்குநர்கள் எல்லை மீறி செல்கின்றனர்.

ஆனால், அதுவே அவர்களுக்கு பேக் ஃபயர் ஆகும் போது படத்தை ரிலீஸ் செய்த பிறகு கத்தரிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

100 கோடி புஷ்பா

100 கோடி புஷ்பா

2 நாட்களில் உலகளவில் 100 கோடி வசூல் வேட்டையை அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் அள்ளி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் கடந்த டிசம்பர் 17ம் தேதி வெளியான புஷ்பா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

சமந்தாவை பார்க்கவே

சமந்தாவை பார்க்கவே

கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள புஷ்பா படத்தை அல்லு அர்ஜுனுக்காகவோ, ராஷ்மிகா மந்தனாவுக்காகவோ பார்க்க போகிறேன் என சொல்லாமல் ஏகப்பட்ட சமந்தா ரசிகர்கள் சமந்தாவின் ஐட்டம் நம்பரை பார்க்கவே செல்கிறோம் என சமூக வலைதளத்தில் அலப்பறை செய்து வருகின்றனர்.

ராஷ்மிகா தாராளம்

ராஷ்மிகா தாராளம்

புஷ்பா படத்தில் ராவாக காட்ட வேண்டும் என பல கவர்ச்சி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சாமி சாமி பாடலில் வெறும் பாவாடையை கட்டிக் கொண்டு ராஷ்மிகா மந்தனா கவர்ச்சியின் உச்சம் தொட்டு ஆடுவதும் அல்லு அர்ஜுன் உடன் படு நெருக்கமாக ரொமான்ஸ் செய்வதுமாக படு தாராளம் காட்டி உள்ளார்.

சர்ச்சை காட்சி நீக்கம்

சர்ச்சை காட்சி நீக்கம்

அனைத்தையும் மிஞ்சும் அளவுக்கு காருக்குள் வைத்து ராஷ்மிகாவின் மார்பை அல்லு அர்ஜுன் தொடும் அந்த காட்சி பார்வையாளர்களை பதை பதைக்க வைத்தது. குடும்பத்தோடு அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்தவர்கள் எல்லாம் குழந்தைகளின் கண்களை மூடும் அளவுக்கு சென்று விட்டதே என வருத்தப்பட்டனர். இந்நிலையில், தற்போது அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் கத்தரி

மேலும் கத்தரி

முதல் பாதி சூப்பரா போகிறது என்றும் இரண்டாம் பாதியில் ஏகப்பட்ட தொய்வு இருப்பதாகவும் பல விமர்சனர்கள் படத்தின் 3 மணி நேர லெந்த் குறித்த விமர்சனங்களை கடுமையாக வைத்து வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனாவுடன் அல்லு அர்ஜுன் ரொமான்ஸ் செய்யும் மேலும் சில காட்சிகளையும் கத்தரி போட்டு படத்தின் நீளத்தை குறைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Recommended Video

Pushpa Movie Review in Tamil by Poster Pakiri | Allu Arjun| Fahadh Faasil| Rashmika| Filmibeat Tamil
பல படங்களில்

பல படங்களில்

தமிழ் சினிமாவிலும் இதற்கு முன்னதாக வெற்றிமாறனின் வட சென்னை படத்தின் என்னடி மாயாவி பாடலில் இடம் பெற்ற ஆண்ட்ரியாவின் அரை நிர்வாண காட்சி எதிர்ப்புகளுக்கு பிறகு நீக்கப்பட்டது. இயக்குநர் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம் பெற்ற நிர்வாண காட்சிகளும் அதிரடியாக நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X