8 நாட்களில் புக் மை ஷோவில் மட்டும் 3.5 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை... அதிரடி புஷ்பா படம்
ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வாரத்தில் வெளியான படம் புஷ்பா.
Recommended Video
சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் சிறப்பான வசூலை பெற்றுள்ளது.

புஷ்பா படம்
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குநர் சுகுமார் டைரக்ட் செய்துள்ளார். இந்தப படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்ததாக இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது.

சிறப்பான வசூல்
படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சிறப்பான வசூலை பெற்றுள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள போதிலும் ஒரு வாரத்திலேயே சிறப்பான வசூலை படம் ஈட்டியுள்ளது. தமிழிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தமிழில் நேரடி படத்தில் நடிக்க விருப்பம்
இதையடுத்து மற்ற நடிகர்களை போல நேரடி தமிழ் படங்களில் நடிக்க அல்லு அர்ஜூன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது முதல் சாய்சாக வெற்றிமாறன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சிறப்பான கதை தேர்விலும் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

படக்குழுவினர் மகிழ்ச்சி
இந்நிலையில் புஷ்பா படம் வெளியிடப்பட்ட அனைத்து சென்டர்களிலும் சிறப்பான வசூலை ஈட்டி வருகிறது. 100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. தொடர்ந்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் படம் புக் மை ஷோவில் மட்டும் கடந்த 8 நாட்களில் 3.5 மில்லியன் டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எகிறிய வசூல்
இந்த ஆண்டில் மற்ற எந்த படத்திற்கும் கிடைக்காத சிறப்பு இதன்மூலம் புஷ்பா படத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று படத்தின் வசூல் எகிறியுள்ளது. வெளிநாடுகளிலும் படத்தில் வசூல் சிறப்பாக காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











