எதுக்குயா இப்படி சிரிக்கிறாங்க... பிளைட்டை கலகலப்பாக்கிய புஷ்பா டீம்!

மும்பை : நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் புஷ்பா.

இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நாளைய தினம் இந்த படம் ரிலீசாக உள்ளது.

இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக டீம் மும்பை சென்றுள்ளது.

புஷ்பா படம்

புஷ்பா படம்

அல்லு அர்ஜுன், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் புஷ்பா. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ள நிலையில் முதல் பாகம் நாளைய தினம் ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஐந்து மொழிகளில் ரிலீஸ்

ஐந்து மொழிகளில் ரிலீஸ்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி என 5 மொழிகளில் புஷ்பா படம் நாளைய தினம் ரிலீஸாக உள்ள நிலையில் இதன் ப்ரோமோஷன் பணிகளுக்காக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்டவர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.

தமிழில் பிரமோஷன்

தமிழில் பிரமோஷன்

தமிழிலும் படம் வெளியாக உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்பு இதன் பிரமோஷன் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்கள் பல்வேறு விஷயங்களையும் படம் குறித்த பல்வேறு தகவல்களையும் பகிர்ந்தனர்.

மும்பை சென்ற புஷ்பா டீம்

மும்பை சென்ற புஷ்பா டீம்

இந்தியில் இந்தப் படம் ரிலீஸாக உள்ள நிலையில் இன்றைய தினம் மும்பையில் இதற்கான பிரஸ்மீட் நடைபெறவுள்ளது. இதையொட்டி தனி விமானத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, தேவிஸ்ரீபிரசாத் உள்ளிட்டவர்கள் சென்றனர்.

மேட் ஃபன்

மேட் ஃபன்

அப்போது அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் மற்றும் அதையொட்டி அவர்களுக்குள் ஏற்பட்ட காமெடி கலாட்டாக்கள் மற்றும் சந்தோஷம், சிரிப்பு ஆகியவற்றை புகைப்படமாக தேவிஸ்ரீபிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வைரலான புகைப்படம்

வைரலான புகைப்படம்

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொச்சியில் இருந்து மும்பைக்கு செல்லும் வழியில் இந்த காமெடி கலாட்டாக்கள் நடந்ததாக தேவிஸ்ரீபிரசாத் தெரிவித்துள்ளார்.

யூத்ஃபுல் டீம்

யூத்ஃபுல் டீம்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் தேவிஸ்ரீபிரசாத் உள்ளிட்ட மூவர் மட்டுமே இந்த விமானத்தில் காணப்படுகின்றனர். மிகவும் யூத்புல் ஆக இந்த புகைப்படம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள ராஷ்மிகா மந்தனா மேட் ஃபன் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X