Actor Sunil : கோலிவுட்டில் மாஸ் காட்டும் புஷ்பா பட வில்லன்.. கைவசம் இத்தனை படங்களா?

சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் சுனில் தற்பொழுது தமிழ் சினிமாவில் அதிகமான திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லன் என பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார் நடிகர் சுனில்.

Pushpa movie villain telugu actor Sunil latest upcoming movies list

தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுனில், நுவே கவாலி என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

தெலுங்கு நடிகர் சுனில்: தெலுங்கு சினிமாவில் கலங்கி வந்த சுனில், தமிழ் ஆடியன்சுக்கு பரீச்சியமானது, அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படத்தின் மூலம் தான். இந்த படத்தில், நடிகர் சுனில், மிரட்டலான லுக்கில் மங்களம் ஸ்ரீனு என்ற வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். புஷ்பா பார்ட் 1 படத்தில் சுனிலின் நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.

அடுத்தடுத்த தமிழ் படங்களில்: இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்து முகமாக மாறிய நடிகர் சுனில், இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாவீரன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தில்: இந்த படத்தைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த, ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது. தமிழ், தெலுங்கு,மலையாளம், இந்தி என பான் இந்திய திரைப்படமாக உருவான இப்படத்தில் நடிக்க நடிகர் சுனிலுக்கு ரூ. 60 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Pushpa movie villain telugu actor Sunil latest upcoming movies list

கோலிவுட்டில் கலக்கும் தெலுங்கு நடிகர்: தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சுனில், ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நாயகனாக நடிக்கும் "புல்லட்" என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டது. அதே போல அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா 2, ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர், குண்டூர் காரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும், நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்திலும், நடிகர் கார்த்தி நடித்து வரும் ஜப்பான் படத்திலும், நடிகை அஞ்சலி நடித்து வரும் ஈகை திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X