ஷூட்டிங்கில் மயங்கி விழுந்தார்.. பிரபல புகைப்பட கலைஞர் மாரடைப்பால் மரணம்.. படக்குழு அதிர்ச்சி!

By

ஐதராபாத்: படப்பிடிப்பில் மயங்கி விழுந்து பிரபல புகைப்படக் கலைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

VIJAY SETHUPATHI அண்ணன் கொடுத்த SURPRISE | ACTOR DHEENA CHAT PART - 02 | FILMIBEAT TAMIL

தெலுங்கு ஹீரோ, அல்லு அர்ஜுன் நடித்து வரும் படம், 'புஷ்பா'. தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது

மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.

வன அதிகாரி

வன அதிகாரி

தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சுகுமார் இயக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் விலகினார். பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

செம்மரக் கடத்தல்

செம்மரக் கடத்தல்

இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. கொரோனாவால் தடைபட்ட இதன் ஷூட்டிங், மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை படக்குழு உறுதி செய்யவில்லை.

மூன்று வில்லன்கள்

மூன்று வில்லன்கள்

இந்தப் படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாகவும் கன்னட நடிகர் தனஞ்செயா ஒரு வில்லனாக நடிக்கிறார் என்றும் தெலுங்கு காமெடி நடிகர் சுனில் மற்றொரு வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

புதிய ஸ்டில்

புதிய ஸ்டில்

அதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இதை நடிகர் அல்லு அர்ஜுன், தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பில் இடம்பெற்றுள்ள புதிய ஸ்டில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.

புகைப்படக் கலைஞர்

புகைப்படக் கலைஞர்

இந்நிலையில், இந்தப் படத்துக்கு புகைப்படக் கலைஞராக ஶ்ரீனிவாஸ் என்பவர் பணியாற்றினார். இவர் சுமார் 200 படங்களுக்கு மேல் புகைப்படக் கலைஞராக பணியாற்றியவர். இந்தப் படத்தின் ஷூட்டிங், இப்போது ராஜமுந்திரியில் உள்ள மரேடுமல்லி வனப் பகுதியில் நடந்து வருகிறது. அங்கு ஶ்ரீனிவாஸ் சென்றிருந்தார்.

திடீர் மாரடைப்பு

திடீர் மாரடைப்பு

படப்பிடிப்பில் அவர் திடீரென நேற்று மயங்கி விழுந்தார். இதையடுத்து படக்குழுவினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

படக்குழு அதிர்ச்சி

படக்குழு அதிர்ச்சி

இதையடுத்து படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. மறைந்த ஶ்ரீனிவாஸுக்கு வயது 54. தெலுங்கு சினிமாவில் பிரபலமான புகைப்படக் கலைஞர் இவர். அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஶ்ரீனிவாஸ் மறைவை அடுத்து தெலுங்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X