ரஷ்யாவிற்கு செல்லும் புஷ்பா டீம்.. சூட்டிங்குன்னு தானே நினைக்கிறீங்க.. அதுதான் இல்லை!

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான படம் புஷ்பா.

இந்தப் படம் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. வசூலிலும் மிரட்டியது.

தற்போது புஷ்பா 2 படத்தின் சூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில் தற்போது படக்குழு ரஷ்யா செல்லவுள்ளது.

 நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கில் அலா வைகுந்தபுரமுலு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இந்தப் படம் அவரை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியது. தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் இவர் நடித்திருந்த புஷ்பா படம் கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் இந்தியாவிலும் பான் இந்தியா படமாக வெளியானது. மரக்கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தின் காட்சி அமைப்புகள் மற்றும் மிரட்டலான திரைக்கதை ரசிகர்களை கட்டிப் போட்டது. இந்தப் படத்தை இயக்கிய சுகுமாருக்கும் நல்ல பெயரை புஷ்பா படம் பெற்றுத் தந்துள்ளது.

கிராமத்து பெண்ணாக ராஷ்மிகா

கிராமத்து பெண்ணாக ராஷ்மிகா

படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகியிருந்தார் ராஷ்மிகா மந்தனா. கிராமத்து பெண்ணின் கதாபாத்திரத்தை இவர் தனது கெட்டப் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்தப் பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

பாக்ஸ் ஆபிஸ் ஹிட்

இந்தப் படம் சிறப்பான வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபிசில் பெற்ற நிலையில், இத்நப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங்கில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

ரஷ்யாவில் வெளியாகும் புஷ்பா

ரஷ்யாவில் வெளியாகும் புஷ்பா

இதனிடையே இந்தப் படம் தற்போது டப்பிங் செய்யப்பட்டு ரஷ்யாவில் வெளியாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் தற்போது ரஷ்யாவில் ரஷ்ய மொழியில் வெளியாகவுள்ளது. சமீப காலங்களில் இதுபோன்று பல படங்கள் வெளிநாடுகளில் அவரவர் மொழிகளில் வெளியாகி வருவது வரவேற்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X