Pushpa 3: அல்லு அர்ஜுனின் புஷ்பாவுக்கு என்ட் கார்டே கிடையாது... அடுத்த அதிரடி Pushpa The Rule Begins
ஹைதராபாத்: அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் 2021ம் ஆண்டு இறுதியில் வெளியானது.
பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய புஷ்பா அல்லு அர்ஜுன் கேரியரில் தரமான படமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகமும் அதே கூட்டணியில் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட்டுடன் இன்னொரு மாஸ் அப்டேட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

Pushpa The Rule Begins:டோலிவுட் டாப் ஸ்டார் அல்லு அர்ஜுன், தற்போது புஷ்பா 2 படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக ரிலீஸான புஷ்பா, பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், புஷ்பா முதல் பாகம் 'புஷ்பா தி ரைஸ்' என்ற கேப்ஷனுடன் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது உருவாகி வரும் இரண்டாம் பாகம் 'புஷ்பா தி ரூல்' என்ற கேப்ஷனுடன் வெளியாகவுள்ளது.
இதில், அல்லு அர்ஜுன் சிண்டிகேட் தலைவரான பிறகு நடக்கும் அதிரடிகள் இடம்பெறும் என தெரிகிறது. முக்கியமாக அல்லு அர்ஜுன் - ஃபஹத் பாசில் இடையேயான மோதல்கள் தரமான ஆக்ஷன் ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இரண்டாம் பாகத்துடன் புஷ்பா திரைப்படம் முடிவுக்கு வரும் என சொல்லப்பட்டது.
ஆனால், இயக்குநர் சுகுமார் இரண்டாம் பாகத்தோடு படத்தை முடிவுக்கு கொண்டுவரும் திட்டத்தில் இல்லையாம். புஷ்பா 2 படத்தை அடுத்தாண்டு சம்மரில் ரிலீஸ் செய்துவிட்டு, அடுத்து 3ம் பாகம் இயக்க முடிவு செய்துள்ளாராம். இது Pushpa The Rule Begins என்ற கேப்ஷனில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகும் எனவும் தெரிகிறது.

புஷ்பா இரண்டாம் பாகத்திற்கான டீசர் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த டீசர், ரசிகர்களுக்கு பெரிய ஹைப் கொடுக்கவில்லை. இதனால் முதல் பாகத்தில் இருந்த எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்திற்கு இருக்குமா என தெரியவில்லை. இந்நிலையில், இயக்குநர் சுகுமார் புஷ்பா 3ம் பாகத்திற்கு ஸ்கெட்ச் போட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புஷ்பா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும் போதே, 3ம் பாகம் குறித்தும் அபிஸியலாக அப்டேட் கொடுக்கவுள்ளாராம் இயக்குநர் சுகுமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புஷ்பா 2, நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் புஷ்பா 3 ஷூட்டிங் எப்போது தொடங்கப்படும் என்பது குறித்தும் இதுவரை தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











