முதல் பாகத்தை நழுவவிட்ட விஜய் சேதுபதி.. மீண்டும் அணுகிய புஷ்பா டீம்.. பார்த்து ஓகே சொல்லுங்க பாஸ்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் விக்ரம் மற்றும் மாமனிதன் என அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.
இரண்டு படங்களிலும் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி கதைக்கும் கேரக்டருக்கும்தான் முக்கியத்துவம் கொடுப்பார். ஒரு கதையின் கேரக்டர் தனக்கு பிடித்துவிட்டால் அதில் நடிப்பதற்காக எந்தவிதமான சமரசமும் செய்துக் கொள்வார். அந்த வகையில் அவரது அடுத்தடுத்த படங்கள் வெளியாகி அவருக்கு வெற்றியை கொடுத்து வருகின்றன.

அடுத்தடுத்த படங்கள்
சமீபத்தில் அவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. விக்ரம் மற்றும் மாமனிதன் படங்கள் சில தினங்கள் இடைவெளியிலேயே வெளியாகின. இந்த இரண்டு படங்களிலும் மிகவும் வித்தியாசமான கேரக்டரை ஏற்று நடித்திருந்தார். முதல் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, இரண்டாவது படத்தில் மாமனிதனாக வாழ்ந்துக் காட்டினார்.

பிசியான விஜய் சேதுபதி
அவர் தற்போது கோலிவுட்டில் மிகவும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் மட்டுமில்லாமல் டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்து கமிட்டாகி நடித்துவரும் அவருக்கு தற்போது புஷ்பா 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கதவை தட்டியுள்ளது.

புஷ்பா படத்தை நழுவவிட்ட விஜய் சேதுபதி
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியான புஷ்பா படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபீசிலும் சிறப்பான வசூலை பெற்று சாதித்தது. இந்தப் படத்திலேயே வனத்துறை அதிகாரியாக நடிக்க கிடைத்த வாய்ப்பை டேட்ஸ் பிரச்சினை காரணமாக நழுவ விட்டார் விஜய் சேதுபதி.

புஷ்பா 2 படத்தில் நடிக்க அழைப்பு
தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திற்கான சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், அந்தப் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க படக்குழுவினர் அணுகியுள்ளனர். ஆனால் இந்த விஷயத்தில் உடனடியாக விஜய் சேதுபதி பதில் சொல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

ஓகே சொல்வாரா?
முதல் பாகத்திலேயே நடிக்க ஒப்புதல் தந்த விஜய் சேதுபதி டேட்ஸ் பிரச்சினையால் அதிலிருந்து விலகினார். இந்நிலையில் தற்போதும் அவர் பிசியாக நடித்துவருவதால் தொடர்ந்து இந்தப் படத்திற்கு ஓகே சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகஸ்டில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











