தங்கம் டா.. மண்ணுக்கு மேல விளையுற தங்கம்... புஷ்பா டிரைலர் எப்படி இருக்கு !

சென்னை : கொல மாஸாக வெளியாகி உள்ள புஷ்பா திரைப்படத்தின் டிரைலர் இணையத்தை தும்சம் செய்து வருகிறது.

தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளம்,இந்தி என 5 மொழிகளில் டிரைலர் வெளியானது

வெளியான சிறிது நேரத்திலேயே 15 மில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளது.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

லாரி டிரைவராக

லாரி டிரைவராக

இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.

5 மொழிகளில்

5 மொழிகளில்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இருபாகங்களாக வெளியாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17ந் தேதி வெளியாக உள்ளது.

மிரட்டும் டிரைலர்

மிரட்டும் டிரைலர்

டிசம்பர் 6ந் தேதி இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியானது, வெளியான சிலமணி நேரங்களிலேயே 15 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலானது. இந்த டிரைலரை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் இப்படத்தின் டிரைலர் எப்படி இருக்குனு பார்க்கலாமா.

மண்ணுக்கு மேல விளையுற தங்கம்

மண்ணுக்கு மேல விளையுற தங்கம்

உலகத்தில் எங்கும் கிடைக்காத கட்ட நம்ம திருப்பதி காட்டில் மட்டும் தான் கிடைக்குதுனு மாஸான ஹெலிகாப்டர் காட்சி டிரைலரில் இடம் பெற்றுள்ளது. ஆயிரம் கோடி சரக்கு இங்கே இருந்துதான் கடத்தப்படுது, தங்கம் டா இது... மண்ணுக்கு மேல விளையுற தங்கம்னு இசையும் காட்சியும் பிரமிக்க வைக்கிறது.

அனல் தெறிக்கும் வசனம்

தாடி, மீசையுடன் கலர்புல் உடையில் என்ட்ரி ஆகும் அல்லு அர்ஜூனின் நடை உச்சுகொட்டவைக்கிறது. தாவணியை கழட்டி வீசும் ராஷ்மிகா உச்சுகொட்டவைத்துள்ளார். இந்த உலகம் உங்களுக்குத் துப்பாக்கியைத் தந்திருக்கு... எனக்கு கோடாளியை தந்திருக்கு, புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைசீங்களா? ஃபயர்ரு போன்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X