தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க சிவகார்த்திகேயன் பக்கா பிளான்..மாவீரன் படத்தில் இணைந்த புஷ்பா நடிகர்!
சென்னை: பிரின்ஸ் படத்தின் மூலம் தெலுங்கு மார்க்கெட்டை பிடிக்க நினைத்த சிவகார்த்திகேயனுக்கு அந்த படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில், எப்படியாவது டோலிவுட் மார்க்கெட்டை பிடிக்க நினைக்கும் அவரது அடுத்த படத்தில் புஷ்பா படத்தின் வில்லன் நடிகர் இணைந்துள்ளார்.
இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது என்றும் மாவீரன் படப்பிடிப்பே நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அது வெறும் வதந்தி என நிரூபிக்கும் விதமாக மீண்டும் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு ஃபுல் ஸ்விங்கில் செல்வதை அறிவிக்க ஆன்போர்ட் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

மோதல் இல்லை
சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக படப்பிடிப்பே நிறுத்தப்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஆனால், மழை காரணமாகவே மாவீரன் படப்பிடிப்பு ஒரு வாரம் நிறுத்தப்பட்டதாகவும், இந்த வாரத்தில் இருந்து மீண்டும் தொடங்கும் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்து இருந்த நிலையில், தற்போது இருவருக்கும் இடையே எந்தவொரு மோதலும் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.

மாவீரன் படப்பிடிப்பு ஆரம்பம்
மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் மாவீரன் படம் உருவாகி வருகிறது. சில வாரங்களாக நிறுத்தப்பட்டு இருந்த மாவீரன் படப்பிடிப்பு இந்த வாரம் முதல் மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தெலுங்கு மார்க்கெட்
கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்த நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், திரைக்கதை காரணமாக தோல்வியடைந்தது. ஆனாலும், சிவகார்த்திகேயனுக்கு டோலிவுட்டில் நல்ல மார்க்கெட் உருவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புஷ்பா வில்லன்
இந்நிலையில், தெலுங்கு ரசிகர்களை மேலும், கவரும் விதமாக மாவீரன் படத்தில் பிரபல தெலுங்கு காமெடி நடிகரும், புஷ்பா படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் சுனில் தற்போது மாவீரன் படத்தில் இணைந்துள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை சாந்தி டாக்கீஸ் வெளியிட்டு அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கார்த்தி படத்திலும்
கார்த்தியின் ஜப்பான் படத்திலும் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் அவர் இணைந்துள்ளார். கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் இடையே நடைபெற்ற தீபாவளி கிளாஷில் சர்தார் திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











