மேடையில் அசிங்கப்பட்ட அழகி.. இலங்கை அழகி பட்டம் பறிப்பு.. யார் இந்த புஷ்பிகா டி சில்வா?
இலங்கை : கொழும்புவில் நடைபெற்ற மிஸஸ் ஸ்ரீலங்கா போட்டியில் பங்கேற்ற புஷ்பிகா டி சில்வா Mrs Sri Lanka பட்டத்தை வென்றார்.
ஆனால் மேடையில் இருந்த போதே அவரது கிரீடம், நடுவர் கரோலினால் பறிக்கப்பட்டது.
இதையடுத்து, கரோலின் மீது வழக்கு தொடுத்து போராடி மீண்டும் "மிஸஸ் ஸ்ரீலங்கா" பட்டத்தை பெற்ற புஷ்பிகா,தனது செயலால் மீண்டும் அதை கோட்டைவிட்டுள்ளார்.

புஷ்பிகா டி சில்வா
புஷ்பிகா டி சில்வா கடந்த ஆண்டு தலைநகர் கொழும்பில் நடைபெற்ற "மிஸஸ் ஸ்ரீலங்கா" போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். ஆனால், இவர் நியாயமற்ற முறையில் வெற்றி பெற்றார் என்றும், மிஸஸ் அழகிப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் திருமணமாகி கணவருடன் வாழ்பவராக இருக்க வேண்டும். ஆனால், புஷ்பிகா டி சில்வா விவகாரத்தானவர் என்பதால் அவர் இந்த பட்டத்தை பெற தகுதி இல்லை என்று கூறி மேடையிலேயே அவரின் கிரீடம் பறிக்கப்பட்டது

மீண்டும் பட்டம்
முந்தைய வெற்றியாளரான கரோலின் ஜூரியால் புஷ்பிகா டி சில்வாவின் கிரிடம் பறிக்கப்பட்டு அடுத்த போட்டியாளருக்கு கொடுக்கப்பட்டது. இதனால் கடுப்பான புஷ்பிகா டி சில்வா ஜூரி கரோலின் தனிச்சையான செயல்பாடு குறித்து வழக்கு தொடுத்தார். பலரும் ஜூரி கரோலின் செயலை கண்டித்தனர். இதையடுத்து புஷ்பிகா டி சில்வாவுக்கு மீண்டும் மிஸஸ் ஸ்ரீலங்கா கொடுக்கப்பட்டது.

நடுவர்களை விமர்சித்தார்
இதையடுத்து, கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் நடைபெற்ற மிஸஸ் உலக அழகிப் போட்டியில் புஷ்பிகா பெரும் எதிர்பார்ப்புடன் பங்கேற்றார். ஆனால் அதில் அமெரிக்க அழகி ஒருவர் பட்டத்தை தட்டிச் சென்றார். இதனால் , டென்ஷனாக புஷ்பிகா, சமூகவலைத்தள பக்கத்தில் உலக அழகிப் போட்டி நடுவர்களை கடுமையாக விமர்சித்தார்.

பட்டம் மீண்டும் பறிப்பு
புஷ்பிகா டி சில்வா செயலால்,உலக அரங்கில் இலங்கைக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது. இதையடுத்து புஷ்பிகாவிற்கு கொடுத்த மிஸஸ் இலங்கை அழகி பட்டத்தை பறிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் இரண்டாவது முறையாக அவரின் அழகிப்பட்டம் பறிக்கப்பட்டது. மேலும், மிஸஸ் இலங்கை என்ற பெயரை எந்த விளம்பரத்திலும் பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











