பட்டையை கிளப்பும் புஷ்பா 2 டீசர்.. ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டம்
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் புஷ்பா 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படம் சம்பாதித்திருக்கிறது. முதல் பாகம் எப்படி இந்தியா முழுவதும் ஹிட்டடித்து அல்லு அர்ஜுனை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியதோ அதேபோல்தான் இந்தப் பாகமும் ஹிட்டடிக்கும் என்று அல்லுவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் இன்று அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
சுகுமார் இயக்கத்தில் உருவாகி மெகா ஹிட்டான படம் புஷ்பா. பான் இந்தியா அளவில் வெளியாகி 500 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பாகுபலி படத்துக்கு பிறகு பல மொழிகளில் ஹிட்டான தெலுங்கு படம் என்ற பெயரையும் புஷ்பா திரைப்படம் பெற்றது. அப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

புஷ்பா 2 : புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது. இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் ஷூட்டிங் நடந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது எடுத்ததுவரையிலும் படத்தை பார்த்த சுகுமார் திருப்தியடையாததால் ரீ ஷூட் நடத்தப்போகிறார் என்ற தகவல் வெளியாகி பிறகு அது வெறும் வதந்தி என்று உறுதியானது.
புஷ்பா 2 க்ளிம்ப்ஸ்: சூழல் இப்படி இருக்க படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக தொடர்ந்து நடந்துவந்தது. கடந்த வருடம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
எப்போது ரிலீஸ்: க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸாகும் என்ற ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு ஸ்வீட் செய்தியாக படமானது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புஷ்பா 2 ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவிருப்பதாலும்; அந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருப்பதாலும்; பிற படங்களின் ரிலீஸுகள் தள்ளிப்போயிருப்பதாகவும்; ரஜினியின் வேட்டையன்கூட புஷ்பா 2 ரிலீஸால்தான் அக்டோபருக்கு தள்ளிப்போயிருப்பதாகவும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 டீசர்: இந்நிலையில் அல்லு அர்ஜுன் இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள்வரை தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். புஷ்பா 2 படக்குழு சார்பாக அல்லு அர்ஜுனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிறந்தநாள் பரிசாக படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு நிமிடம்வரை ஓடும் டீசரில் ஆக்ஷன் காட்சிகள் பொறி பறக்கும்படி இருக்கின்றன. தற்போது புஷ்பா 2 டீசர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











