புத்தம் புது காலை டைட்டில் பாடல்... ப்ரோ மேக்ஸ் விருதை தட்டி சென்றதாக ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சி

சென்னை : ஐந்து முக்கிய டைரக்டர்கள் இயக்கிய வித்தியாசமான கதைகளுடன் வெளிவந்து சிறப்பான விமர்சனங்களை பெற்றது புத்தம் புது காலை படம்.

இரண்டரை மணிநேரம் ஒரே கதையை பார்ப்பது ஒரு அனுபவம் என்றால் ஒரே படத்தில் 5 கிளை கதைகளை பார்த்தது சிறப்பான அனுபவமாக இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது இந்த படத்தின் டைட்டில் பாடல் ப்ரோ மேக்ஸ் விருதை தட்டி சென்றுள்ளது. இதை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

புத்தம் புது காலை படம்

புத்தம் புது காலை படம்

சுகாசினி மணிரத்னம், கௌதம் மேனன், சுதா கொங்குரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய தமிழ் படங்களின் முன்னணி இயக்குநர்கள் இணைந்து 5 கிளைக் கதைகளை இயக்கியிருந்தனர் புத்தம் புது காலை படத்தில். இதன் ஒவ்வொரு கதையும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்திருந்தது.

உறவுச் சிக்கல்கள்

உறவுச் சிக்கல்கள்

குடும்ப உறவுகளின் சிக்கல்கள், அழகான தருணங்கள் உள்ளிட்டவற்றை சிறப்பான வகையில் 5 இயக்குநர்களும் நம்முடைய கண்முன்னே கொண்டு வந்திருந்தனர். குறிப்பான சுகாசினி, அனு ஹாசன், ஆன்ட்ரியா, காளிதாஸ், ரிது வர்மா போன்றவர்களின் நடிப்பு சிறப்பானதாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிறப்பான டைட்டில் பாடல்

சிறப்பான டைட்டில் பாடல்

பாசிட்டிவ்வாகவும் நெகட்டிவ்வாகவும் இந்த கதைகளுக்கு விமர்சனங்கள் வந்த நிலையிலும் மொத்தத்தில் வொர்த்தான படம்தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்திருந்தனர். படத்தின் டைட்டில் பாடல் சிறப்பாக அமைந்திருந்தது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் இதன் வீடியோவும் வெளியாகி அப்போது சிறப்பான வரவேற்பை பெற்றது.

ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சிப்பதிவு

ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சிப்பதிவு

அமேசான் ப்ரைமில் வெளிவந்த புத்தம்புது காலை படம் போன்ற சிறப்பான முயற்சிகளுக்கு ரசிகர்கள் என்றுமே ஆதரவு அளிப்பார்கள் என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த பாடல் ப்ரோ மேக்ஸ் விருதை தட்டியுள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X