twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “புத்தம் புது இசை மலரை அறிமுகப்படுத்துகிறேன்”: ரோஜா 30ஆண்டுகள், ரஹ்மானுக்கு கிடைத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்

    |

    சென்னை: மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    Recommended Video

    AR Rahman | சர்வதேச எல்லைகளைக் கடந்த AR Rahman-னின் 30 ஆண்டுகள் *Kollywood

    கவிதாலயா சார்பில் மறைந்த இயக்குநர் பாலச்சந்தர் 'ரோஜா' படத்தை தயாரித்திருந்தார்.

    இப்படத்தின் மூலம் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளராக திரைத்துறையில் அறிமுகமானார்.

    சூர்யா 42 படத்தோட சூட்டிங் எப்ப துவங்குது தெரியுமா.. ரசிகர்கள் கொண்டாட மேலும் ஒரு காரணம்! சூர்யா 42 படத்தோட சூட்டிங் எப்ப துவங்குது தெரியுமா.. ரசிகர்கள் கொண்டாட மேலும் ஒரு காரணம்!

    ரசிகர்களை கவர்ந்த ரோஜா

    ரசிகர்களை கவர்ந்த ரோஜா

    கவிதாலயா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' திரைப்படம், 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. அரவிந்த் சாமி, மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது. அரவிந்த் சாமியும் மதுபாலாவும் புதுமணத் தம்பதிகளாக நடித்திருந்த இந்தப் படம், ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. ரோஜா திரைப்படம் தமிழ் சினிமாவுக்கு பெரிய ஆளுமையை அறிமுகப்படுத்தியது.

    இசைப்புயலாக சுழன்றடித்த ரஹ்மான்

    இசைப்புயலாக சுழன்றடித்த ரஹ்மான்

    பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும் சிறிய மனவருத்தம் இருந்ததால், அவர் தயாரித்த ரோஜா படத்திற்கு, புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்த முடிவெடுத்தார். ஆரம்பத்தில் ரொம்பவே தயங்கிய மணிரத்னம், பின்னர் ஏ.ஆர். ரஹ்மானுடன் கூட்டணி வைத்தார். அதுவரை இளையராஜா, டி.ஆர். ராஜேந்திரன், எஸ்.ஏ. ராஜ்குமார் போன்ற இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்திருந்த ஏ.ஆர். ரஹ்மான், 'ரோஜா' படம் வெளியானதும் இசைப்புயலாக சுழன்றடித்தார்.

    புத்தம் புது இசை மலர்

    புத்தம் புது இசை மலர்

    'ரோஜா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஏ.ஆர் ரஹ்மானை இயக்குநர் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தியதை, யாரும் மறந்திருக்க முடியாது. "உங்கள் அனைவருக்கும் நான் ஒரு புத்தம் புது இசை மலரை அறிமுகப்படுத்துகிறேன்" என, மேடையில் ரஹ்மானின் கையைப் பிடித்து இழுத்துவந்து இன்ட்ரோ கொடுத்தார் பாலச்சந்தர். அது சாதாரணமான அறிமுகம் இல்லையென அப்போது யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

    முதல் படத்தில் தேசிய விருது

    முதல் படத்தில் தேசிய விருது

    'ரோஜா' படத்தின் பாடல்கள் வெளியானதும், அதை கேட்ட ரசிகர்கள் பிரமித்து நின்றனர். 'சின்ன சின்ன ஆசை', 'புது வெள்ளை மழை'. 'காதல் ரோஜாவே', 'தமிழா தமிழா' என படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும், புதுவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அந்த புதுமையான அனுபவத்தில் இருந்து ரசிகர்களால் மீளவே முடியவில்லை. அதோடு முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வென்றார் ரஹ்மான்.

    கவிதாலயாவின் சூப்பர் வாழ்த்து

    கவிதாலயாவின் சூப்பர் வாழ்த்து

    இந்நிலையில், 'ரோஜா' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ரஹ்மானும் தனது 30 ஆண்டுகால சினிமா பயணத்தை நிறைவு செய்துள்ளார். அமெரிக்காவில் இசைநிகழ்ச்சி நடத்திவரும் ரஹ்மான், 'ரோஜா' படத்தை நினைவுகூர்ந்து, மணிரத்னம், பாலச்சந்தர், எஸ்பிபி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதேபோல், கவிதாலயா நிறுவனமும் ரஹ்மானுக்கு சூப்பராக வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

    வைரலாகும் வாழ்த்து வீடியோ

    வைரலாகும் வாழ்த்து வீடியோ

    இசை நிகழ்ச்சியில் ரஹ்மான் நன்றி சொன்ன வீடியோவை எடிட் செய்துள்ள கவிதாலயா நிறுவனம், அதில், அரவிந்த் சாமி, மதுபாலா, புஷ்பா கந்தசாமி ஆகியோர் ரோஜா படத்தின் இசை குறித்தும் ரஹ்மான் பற்றியும் பேசியதை இணைந்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரஹ்மான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், பலரும் ரஹ்மானுக்கு தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

    English summary
    "Putham Puthu Isai Malarai Arimugapaduthugiren": Kavithalayaa wishes to AR Rahman
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X