twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    5 வித்தியாசமான கதைகள்.. புத்தம் புது காலை .. அக்டோபர் 16 ரிலீஸ் !

    |

    சென்னை : இந்திய ஆந்தாலஜி திரைப்படமான புத்தம் புது காலை அக்டோபர் 16 ஆம் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியாகிறது.

    வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம், இரண்டாவது வாய்ப்பு மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாகும்.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான - சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணி ரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வெளியாக உள்ளது.

    புத்தம் புது காலை

    புத்தம் புது காலை

    மும்பை, இந்தியா, செப்டம்பர் 30, 2020 - வாழ்க்கையின் ஒரு புதிய தொடக்கம் மற்றும் நம்பிக்கையை பற்றின கதைகளை கொண்டு இந்த தொற்று நோய் காலக்கட்டத்தில் படமாக்கப்பட்ட ஐந்து குறும்படங்களின் தொகுப்பாக வெளிவரவுள்ள புத்தம் புது காலை என்ற திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ அறிவித்திருக்கிறது.

    அழகான குட்டி கதைகள்

    அழகான குட்டி கதைகள்

    இளமை இதோ இதோ - சுதா கொங்கரா இயக்கியுள்ளார். (உத்தம வில்லன்). காளிதாஸ் ஜெயரம் (பூமரம்) மற்றும் ஊர்வசி (சூரரை போற்று), கல்யாணி பிரியதர்ஷன் (ஹீரோ) ஆகியோர் நடித்துள்ளனர். அவரும் நானும்/ அவளும் நானும் - கவுதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்) இயக்கியத்தில் எம்.எஸ். பாஸ்கர் (சிவாஜி த பாஸ்) மற்றும் ரீத்து வர்மா (பெல்லி சூப்புலு) ஆகியோர் நடிக்கின்றனர்.

    முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள்

    காஃபி, எனி ஒன்? - சுஹாசினி மணி ரத்னம் (சிந்து பைரவி) இயக்கி நடிக்க அவருடன் இணைந்து அனு ஹாசன் (இந்திரா), ஸ்ருதி ஹாசன் (ட்ரெட்ஸ்டோன்) ஆகியோர் நடிக்கின்றனர். ரீயூனியன் - ராஜீவ் மேனன் (கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்) இயக்கத்தில், ஆண்டிரியா (வட சென்னை), லீலா சாம்சன் (ஓகே கண்மணி) மற்றும் சிக்கில் குருச்சரன் ஆகியோர் நடிக்கின்றனர்.

     உணர்ச்சிகளை வெளிப்படுத்தி

    உணர்ச்சிகளை வெளிப்படுத்தி

    புத்தம் புது காலை திரைப்படம் ‘ஊரடங்கு தளர்வின்' போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் (FEFSI) வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டது. "நம்பிக்கை, காதல் மற்றும் புதிய தொடக்கங்களை பற்றி பேசவும் மற்றும் இந்த சவாலான காலக்கட்டத்தில் கலை மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கொள்ளும் நோக்கத்துடனும் புத்தம் புது காலை உருவானது, மேலும் புத்தம் புது காலை மூலம் தமிழ் பொழுதுபோக்கு துறையின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் படைப்புக்களை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சியடைகிறோம்." என்று அமேசான் பிரைம் வீடியோவின் இந்திய ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோஹித் கூறினார்.

    ஆஃப்லைனில் பார்க்கலாம்

    ஆஃப்லைனில் பார்க்கலாம்

    ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடபோன் போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்-பில், ப்ரைம் உறுப்பினர்கள் இந்த எல்லா படங்களையும் எந்த நேரத்திலும், எங்கிருந்து வேண்டுமானாலும் பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் தங்கள்மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்களில் ப்ரைம் வீடியோ ஆப்-பில் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் என்பது கூடுதல் தகவலாகும்.

    Read more about: amazon prime tamil short film
    English summary
    Putham Puthu Kalai to release on October 16 Release on Amazon Prime!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X