புதுப்புது அர்த்தங்கள் கீதாவிற்கு இன்று பிறந்தநாள்… அவரை பற்றி சில!

பெங்களூர் : தமிழ் சினிமா ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத சிறந்த நடிகைகளில் ஒருவராக நடிகை கீதா இருந்து வருகிறார்.

இதுவரை தமிழில் பல படங்களில் நடித்து அந்த அழகான கதாபாத்திரங்களை இயல்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இன்றுவரை பலரையும் கவர்ந்து வருகிறார்.

கதாநாயகியாகவும் மற்றும் அனைத்து குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து இன்று வரை நம் அனைவரையும் ரசிக்க வைத்து வரும் கீதா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

மிகவும் பரிச்சயமான

மிகவும் பரிச்சயமான

சில நடிகைகள் ஒரு சில மொழி ரசிகர்களை மட்டுமே கவரும் தன்மை கொண்டு இருக்கும் நிலையில் தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் நடித்து அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான நடிகை கீதா இன்றுவரை பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்து வருகிறார்.

பைரவி படத்தில்

பைரவி படத்தில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக பைரவி படத்தில் அறிமுகமான இவர் இன்று வரை பல்வேறு கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் கூட்டம் ஏராளம்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தங்கையாக பைரவி படத்தில் அறிமுகமான இவர் இன்று வரை பல்வேறு கதாபாத்திரங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு தென்னிந்தியாவில் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் கூட்டம் ஏராளம்.

கே.பாலச்சந்தர் இயக்கிய

கே.பாலச்சந்தர் இயக்கிய

தென்னிந்திய சினிமா துறைகளான தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த இவர் ஹிந்தி மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் தங்கை உட்பட சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கீதா கே.பாலச்சந்தர் இயக்கிய புதுப்புது அர்த்தங்கள் படத்தில் ரகுமானுக்கு ஜோடியாக நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி வந்த நிலையில் இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.

அம்மா கதாபாத்திரங்கள்

அம்மா கதாபாத்திரங்கள்

புதுப்புது அர்த்தங்கள் திரைப்படத்தை தொடர்ந்து கேளடி கண்மணி, தளபதி குருதிப்புனல், அபிமன்யு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள இவர் தற்போதுள்ள தலைமுறைக்கு அம்மா கதாபாத்திரங்கள் மூலம் மிகவும் பிரபலமானார். விஜய், ஜெயம் ரவி உள்ளிட்ட பல கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ள இவர் பல இளம் தலைமுறையினருக்கும் மிகவும் பரிச்சயமாகி உள்ளார்.

சிறந்த அம்மா

சிறந்த அம்மா

தமிழில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான சிவகாசி, உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் மற்றும் சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் இவரின் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டு சிறந்த அம்மா என்ற பலராலும் அழைக்கப்பட்டு வந்தார். இவ்வாறு தனது அழகான நடிப்பின் மூலம் இன்றுவரை பலரையும் கவர்ந்து வரும் நடிகை கீதா தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

பெண்களுக்கு பிடித்தமானவர்

பெண்களுக்கு பிடித்தமானவர்

தமிழில் மிகப்பிரபலமான நெடுந்தொடர்களான பெண், அண்ணி,. ராஜகுமாரி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பல குடும்பப் பெண்களுக்கும் மிகவும் பரிச்சயமாகி உள்ளார். இவ்வாறு தனது மிகச் சிறந்த நடிப்பின் மூலம் இன்று வரை அனைவரையும் பல்வேறு கதாபாத்திரங்களின் வாயிலாக கவர்ந்து வரும் கீதா இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

ஜூன் 14 ஆம் தேதியான இன்று இவர் தனது 58 வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவரின் ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. சமூகவலைத்தளங்களிலும் இவரின் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X