சூப்பர் ஆட்டம் போட்ட பேட்மிண்டன் வீராங்கனை.. என்ன ஸ்டைல்.. சூப்பர்தான் போங்க!

சென்னை : நடிகர்கள், நடிகைகள் பல பாடல்களுக்கு சூப்பர் ஆட்டம் போட்டு அதன் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வது வாடிக்கையான ஒன்றுதான்.

ஆனால் பிரபல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளும் தங்களுக்கு விருப்பமான பாடல்களுக்கு சூப்பர் ஆட்டம் போட்டு அதை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் சிறப்பான பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து பல பாடல்களுக்கு இவ்வாறு ஆட்டம் போட்டு சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

பேட்மிண்டன் வீராங்கனை

பேட்மிண்டன் வீராங்கனை

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்று வருகிறார். இதன்மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர். இது மட்டுமில்லாமல் ஒலிம்பிக்கிலும் பங்கேற்று இவர் இரண்டு முறை பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிடுவதில் இவர் மிகவும் பிசி. இவரது இத்தகைய வீடியோக்கள், புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ்களை ரசிகர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அதிகமான பாலோயர்கள்

அதிகமான பாலோயர்கள்

மேலும் இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடர்பவர்களும் அதிகமாக காணப்படுகின்றனர். இவரது அடுத்தடுத்த ரீல்ஸ் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். தொடர்ந்து வெற்றிப்பட பாடல்களுக்கு இவர் சிறப்பான டான்ஸ் ஆடி ஏராளமான ரீல்ஸ் வீடியோக்களையும் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

பிரபல பாடல்களுக்கு டான்ஸ்

பிரபல பாடல்களுக்கு டான்ஸ்

கச்சா பாதம், மயக்குறியே உள்ளிட்ட பல பாடல்களுக்கு இவர் சிறப்பான ஆட்டம் போட்டு அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோக்களுக்கு ஏராளமான லைக்ஸ்களும் கிடைத்துள்ளன. அந்த வகையில் தற்போது புதிய ரீல்ஸ் வீடியோக்களை சிந்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

சிறப்பான காஸ்ட்யூமில் நடனம்

சிறப்பான காஸ்ட்யூமில் நடனம்

சிறப்பான காஸ்ட்யூமில் கண்களில் கூலர்சுடன் இந்த நடனத்தை அவர் ஆடியுள்ளார். ஹெட் ஷோல்டர்ஸ் மற்றும் கோமி கோமி ஆகிய பாடல்களுக்கு இவர் அசத்தலான வகையில் டான்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவின் கேப்ஷனில் உங்களுக்கு எது உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறதோ அதை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கூலான சிந்து

கூலான சிந்து

பேட்மிண்டன் களத்தில் சிந்துவை மிகவும் தீவிரமாகத்தான் பார்க்க முடியும். வியர்வை தெறிக்க இவர் ஆடுவதை பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள். இந்நிலையில் இவர் கூலாக கூலர்சுடன் நடனமாடுவதை பார்க்கவும் தனியாக ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X