என்ன விஷயம்.. தலைவர் 168 ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர்ஸ்டாரை சந்தித்த ஸ்போர்ட்ஸ் பிரபலம்!

ஹைதராபாத்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து சந்தித்துள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தர்பார் படத்தைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'தலைவர் 168' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை, பி.வி. சிந்து நேரில் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

செம்ம ஸ்பீடு

செம்ம ஸ்பீடு

2.0, பேட்ட, தர்பார், தலைவர் 168 என செம்ம ஸ்பீடில் நடிகர் ரஜினிகாந்த் படங்களை நடித்துத் தள்ளி வருகிறார். உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், எப்படி இவ்ளோ ஸ்பீடாக படங்களை முடித்துக் கொடுக்கிறார் என இளம் நடிகர்கள் வாய் பிளக்கும் அளவுக்கு தனது எனர்ஜியை மீண்டும் கொண்டு வந்துள்ளார் சூப்பர்ஸ்டார்.

தர்பார் ரிலீஸ்

தர்பார் ரிலீஸ்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் 2.0 படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தர்பார் டிரைலர் மற்றும் சும்மா கிழி பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

கீர்த்திக்கு என்ன ரோல்?

கீர்த்திக்கு என்ன ரோல்?

தலைவர் 168 படத்தில் நடிகர் ரஜினிகாந்த், வீரா படத்திற்கு பிறகு மீண்டும் இரு மனைவிகளுடன் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மீனா, குஷ்பு ஆகிய இரு நடிகைகளும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினிக்கு தங்கையாக நடிக்கவுள்ளார் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

சூப்பர் ஸ்டாரை சந்தித்த சிந்து

ஹைதராபாத்தில் தலைவர் 168 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், ஹதராபாத்தில் இருக்கும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

சிந்து ரசிகர்

2016ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற பி.வி. சிந்து, வெள்ளி பதக்கத்தை வென்றார். பி.வி. சிந்து பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், 'நான் உங்கள் ரசிகர்' என்று குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X