கார்த்தி - நாகார்ஜுனாவை இணைத்து புதிய படம்.. பிவிபி சினிமா அறிவிப்பு
'மெட்ராஸ்' படத்தின் வெற்றி கார்த்தியின் சினிமா பார்வையையே மாற்றியிருக்கிறது. மிகுந்த உற்சாகமும் நம்பிக்கையும் பெற்றுள்ள கார்த்தி, அடுத்து பிவிபி சினிமா நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணுகிறார்.
தமிழ் - தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார் நாகார்ஜுனா.

முத்தையா இயக்கத்தில் இப்போது கார்த்தி நடிக்கும் 'கொம்பன்' முடிந்ததும், இந்தப் புதிய படம் தொடங்குகிறது. லாவிஷ் புரொடக்ஷனும், பிவிபி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.
'முன்னா', 'பிருந்தாவனம்', 'எவடு' ஆகிய படங்களை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கவில்லை.
நாயகி உட்பட மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications