twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யம் சினிமாஸை ரூ. 850 கோடிக்கு வாங்கிய பிவிஆர்

    By Siva
    |

    சென்னை: சத்யம் சினிமாஸின் பங்குகளை ரூ. 850 கோடிக்கு வாங்கியுள்ளது பி.வி.ஆர்.

    சத்யம் திரையரங்குகளின் உரிமையாளரான எஸ்பிஐ சினிமாஸ் சென்னையில் மிகவும் பிரபலமானது. 1974ம் ஆண்டு துவங்கப்பட்ட சத்யம் சினிமாஸ் தற்போது எஸ்2, எஸ்கேப், பலாசோ, தி சினிமா என்று பல பெயர்களில் இயங்கி வருகிறது.

    PVR buys Sathyam cinemas for Rs. 850 crore

    இந்நிலையில் சத்யம் சினிமாஸின் பங்குளில் 71.7 சதவீதத்தை பி.வி.ஆர். வாங்கியுள்ளது. ரூ. 850 கோடியில் இந்த டீல் முடிக்கப்பட்டுள்ளது. 10 நகரங்களில் 76 தியேட்டர்களை கொண்டுள்ள சத்யம் சினிமாஸ் அடுத்த 5 ஆண்டுகளில் 100 தியேட்டர்களாக விரிவுபடுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    சத்யம் சினிமாஸின் பங்குகளை வாங்கியதன் மூலம் பி.வி.ஆருக்கு தற்போது 60 நகரங்களில் 152 இடங்களில் 706 ஸ்கிரீன்கள் உள்ளது. இதன் மூலம் உலகின் 7வது மிகப்பெரிய தியேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது பிவிஆர்.

    கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் தியேட்டர்களை நடத்துவது மிகவும் கடினமாக உள்ளதால் சத்யம் சினிமாஸின் பங்குகளை பிவிஆருக்கு கொடுக்க உரிமையாளர்கள் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் சத்யம் சினிமாஸின் பெயரை பிவிஆர் மாற்றினாலும் அது எங்களுக்கு எப்பொழுதுமே சத்யம் தான் என்று தமிழ் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    PVR has bought Sathyam Cinemas for Rs, 850 crore thus becoming the seventh largest cinema exhibitor in the world.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X