ஹரிஷ், ரைசா நடிக்கும் 'பியார் பிரேம காதல்' - மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
Recommended Video

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண், ரைசா இருவரும் இணைந்து படத்தில் நடிக்கவிருக்கும் தகவல் முன்பே வெளியானது.
பாதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷும், தொடக்கத்திலிருந்தே பிக்பாஸில் பங்குபெற்ற ரைசாவும் இணைந்து நடிக்கும் படத்திற்கு 'பியார் பிரேமா காதல்' என டைட்டில் வைக்கப்பட்டது.
'பியார் பிரேம காதல்' படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.
பியார் பிரேமா காதல்
இளன் இயக்கும் இந்தப் படத்தை கே.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். அவரே இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின.

ஹீரோயின் ரைசா
ரைசா ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இது. இதற்கு முன் நாயகியின் தோழியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் 'சிந்து சமவெளி', 'பொறியாளன்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர் யுவன்
இந்தப் படம் பற்றி யுவன், 'ஒரு படத்தை தயாரிக்கும்போது கிடைக்கும் உற்சாகம் அளவற்றது. நல்ல கூட்டணி, நல்ல கதை, நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள், முன்னேறி வரும் பிரபல நட்சத்திரங்கள் ஆகியவற்றின் சங்கமம் இப்படத்தயாரிப்பை மேலும் சிறப்பாக்கியுள்ளது." எனக் கூறினார்.
மோஷன் போஸ்டர்
'பியார் பிரேம காதல்' படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் ஹரிஷும் ரைசாவும் ஹெப்போனில் பாடல் கேட்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.

வித்தியாசமான காதல்
ஹரிஷ், "கண்மணியே காதல் என்பது..." பாடல் கேட்க, ரைசா 'தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா..." பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதைவைத்துப் பார்த்தால் வெவ்வேறு குணாதிசியம், டேஸ்ட் கொண்ட இருவர் காதலிப்பது தான் இப்படத்தின் கதையாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

சிங்கிள் ட்ராக்
'பியார் பிரேம காதல்' மோஷன் போஸ்டர் ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடல் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி 13-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











