ரீமேக் உரிமைக்கு போட்டா போட்டி.. இந்தியில் தயாராகும் பியார் பிரேமா காதல்!

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்து வெற்றி பெற்ற பியார் பிரேமா காதல் படம் இந்தி மொழியிலும் தயாராகவுள்ளது.

By Rajeswari

சென்னை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்து வெற்றிபெற்ற பியார் பிரேமா காதல் படம் இந்தி மொழியிலும் தயாராகவுள்ளது.

தமிழில் சமீபத்தில் இயக்குநர் இளன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில், பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிப்பில் வெளியான படம் பியார் பிரேமா காதல். இந்தப் படம் எல்லாத் தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Pyaar Prema Kadhal is ready for Hindi

இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் இளன் அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். மேலும் இந்தப் படத்தின் மூலம் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா தங்களது இயல்பான நடிப்பால் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய, இந்தி பட தயாரிப்பாளர் சந்திப் சிங் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு இந்தப் படத்தின் உரிமையைத் தயாரிப்பாளர் தரப்பு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மிக விரைவில் பியார் பிரேமா காதல் படத்தை இந்தியில் பார்க்கலாம்.

அந்த படத்தில் யார் ஹீரோ, ஹீரோயின் என்று பொறுத்திருந்து பாப்போம். மற்ற மொழியிலும் ரீமேக் செய்ய அழைப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X