கருணாநிதிக்கு மரியாதை.. மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றிய ‘பியார் பிரேமா காதல்’
பியார் பிரேமா காதல் படம் நாளை ரிலீசாக இருக்கிறது.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவால், இன்று ரிலீசாவதாக இருந்த பியார் பிரேமா காதல் பட ரிலீஸ் நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமான ஹரீஷ் கல்யாணும், ரைஸாவும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பியார் பிரேமா காதல். கே புரொடக்ஷன்ஸ் ராஜராஜன் மற்றும் ஒய் எஸ் ஆர் பிக்சர்ஸ் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை, இளன் இயக்கியுள்ளார்.

கமலின் விஸ்வரூபம் நாளை ரிலீசாக இருப்பதால், ஒரு நாள் முன்னதாக இன்று பியார் பிரேமா காதல் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் காலமானதால், அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இப்படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளது படக்குழு.
இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் கருணாநிதியின் இழப்பு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அதனை பகிர்ந்து கொள்ளும் விதமாக, பியார் பிரேமா காதல் படத்தின் வெளியீடு ஒருநாள் தள்ளி வைக்கப்படுகிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நல்ல சினிமாக்களின் காதலராக திகழ்ந்த அந்த மாமனிதர், நம்முடன் எப்போதும் இருந்து நம்மை வாழ்த்துவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











