மீண்டும் இணையும் "பியார் பிரேமா காதல்" கூட்டணி... ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில்!
சென்னை : கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் காதலர்களை வெகுவாக கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றது.
ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் என இரண்டு இளம் நடிகர்கள் முதன்முறையாக இணைந்து நடித்திருக்கும் இத்திரைப்படத்தை இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரித்திருந்தார்.
இளமை துள்ளலுடன் காதலர்களுக்கு பிடித்தவாறு உருவான பியார் பிரேமா காதல் வெற்றியை தொடர்ந்து இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக வெளியான தகவலை அடுத்து விரைவில் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

பெரும் ரசிகர் கூட்டம்
தற்போது தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகைகளை கொண்டு காதல் மன்னனாக வலம் வரும் நடிகர் ஹரீஷ் கல்யாண் சிந்து சமவெளி, பொறியாளன், சட்டப்படி குற்றம், அரிது அரிது, வில் அம்பு என பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பியார் பிரேமா காதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது குறிப்பாக பெண் ரசிகர்களை.

இருவரும் ஜோடியாக
அறிமுக இயக்குனர் இளன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் ஜோடியாக நடிக்க இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் கூடியது. மேலும் இன்று வரை இந்த படத்திற்கு என தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ரொமான்ஸ் ஒர்க்அவுட்
பிக் பாஸ் சீசன் 1ல் ரைசா மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்ட போது கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இதில் இந்த ஜோடி இணைய ரொமான்ஸ் மிக நன்றாகவே ஒர்க்அவுட் ஆனது.

கவனத்தை ஈர்த்து
மேலும் இதுவரை இசையமைப்பாளராக நாம் அனைவரும் பார்த்து வந்த யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக தயாரிப்பாளராகவும் இந்த திரைப்படத்தின் மூலம் அவதாரம் எடுக்க மேலும் பலரின் கவனத்தை இத்திரைப்படம் ஈர்த்தத்தோடு இதற்கு யுவன் சங்கர் ராஜாவே இசையமைத்திருந்தார்.

பாடல்கள் சூப்பர் ஹிட்
இளமைத் துள்ளலுடன் காட்சிக்கு காட்சி தற்போதுள்ள தலைமுறையினருக்கு ஏற்றவாறு ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாகி இருந்த "பியார் பிரேமா காதல்" பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான நிலையில் படமும் வெளியாகி சக்கைப்போடு போட்டு பாக்ஸ் ஆபிஸில் நன்கு கல்லா கட்டியது.

சாம்பிள் போஸ்டர்
இவ்வாறு அனைவரையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற பியார் பிரேமா காதல் கூட்டணி இப்பொழுது மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரிஷ் கல்யாண், இளன், யுவன்சங்கர்ராஜா சூப்பர் ஹிட் மீண்டும் இணையும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என வெளியிடப்பட்ட சாம்பிள் போஸ்டர் இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.
Recommended Video

காதலை மையமாக
ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். யுவன் இசையமைக்கவுள்ளார். 'பியார் பிரேமா காதல்' படத்தைப் போல இப்படம் காதலை மையப்படுத்தி இல்லாமல் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் என்கிறது படக்குழு. இதில் பல்வேறு கெட்டப்களில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications