Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக் பாஸ் வீட்ல கூட இப்படி பாக்கலையே… ஆனா ட்ரெயிலர்ல கலக்குறீங்களேம்மா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடித்திருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் தயாரிக்கும் முதல் படம் பியார் பிரேமா காதல். பிக் பாஸ் முதல் சீசன் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடித்திருக்கும் இப்படத்தை எலன் இயக்கி உள்ளார்.
பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. இருங்க ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணிகிட்டு இருக்கேன்ல என்று எரிச்சலோடு அம்மாவின் குரலுக்கு ஹரிஷ் கல்யாண் பதிலளிக்கும் காட்சியோடு ட்ரெய்லர் துவங்குகிறது.
பக்கா சிட்டி அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக ரைசா வருகிறார். ராசிபலன் பார்த்து காதலைச் சொல்லும் வெகுளிப் பையனாக ஹரிஷ் கதாபாத்திரம் உள்ளது. ஒன்னா இருந்த போட்டோக்களை லீக் பண்ணிவிடுவேன் என ரைசா மிரட்டுவதைக் கண்டு ஹரிஷ் பதறுகிறார்.
மெடிகல் ஷாப் அருகே வண்டியை நிறுத்தச் சொல்லி, தொண்டை சரியில்லை ஒரு ஹால்ஸ் வாங்கிக்கொடு, இன்று அப்பா வீட்டில் இல்லை, நான் லேட்டா போனாலும் ஏதும் பிரச்சனை இல்லை. உனக்கு எதாவது தேவை என்றால் வாங்கிக்கோ என சொல்லும்போது...ரைசாவின் மனசு ஆடியன்ஸ்க்கு புரிகிறது. ஆனால் ஹரிஷுக்கு புரியாமல் எனக்கென்ன இருக்கு மெடிகல் ஷாப்ல வாங்குறதுக்கு...? உன்ன வீட்ல விட்டுட்டு இட்லிதான் வாங்கனும்னு சொல்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை நிச்சயம் படத்திற்கு மிகப்பெரிய பலம் எனத் தெரிகிறது. கலக்கலான மசாலா கலந்த படமாக பியார் பிரேமா காதல் இருக்க போகிறது. டோப் ட்ராக், ஹை ஆன் லவ் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளன. இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீஸ் ஆகுமெனெ எதிர்பார்க்கப்படுகிறது.