twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதிய திரைப்படங்களுக்கு விபிஎஃப் கட்டணம் 100% தள்ளுபடி.. கியூப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

    |

    சென்னை: தீபாவளிக்கு வெளிவரும் புதிய படங்களுக்கு விபிஎஃப் கட்டணம் 100% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக க்யூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

    Recommended Video

    MASTER படத்துக்கு TICKET வாங்க வந்தோம் | CINEMA THEATRE OPEN | PUBLIC OPINION | FILMIBEAT TAMIL

    தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 10ஆம் தேதியான இன்று முதல் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

    அத்துடன் கொரோனா நெறிமுறைகளுடன் 50 இருக்கைகளுடன் இயக்கவும் உத்தரவிட்டது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், புதியப்படங்கள் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    பாரதிராஜா அறிக்கை

    பாரதிராஜா அறிக்கை

    விபிஎஃப் கட்டணம் தொடர்பாக தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இழுபறி நிலவி வந்தது. விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாதவரை புதியப்படங்கள் வெளியிடப்படாது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

    விபிஎஃப் கட்டணம் 100% தள்ளுபடி

    விபிஎஃப் கட்டணம் 100% தள்ளுபடி

    இந்நிலையில் தீபாவளிக்கு வெளிவரும் புதிய படங்களுக்கு விபிஎஃப் கட்டணம் 100% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக க்யூப் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கியூப் சினிமா, டிஜிட்டல் சினிமா உருவாக்கத்திற்காக பணிகளை செய்துதரும் முன்னணி நிறுவனமாக உள்ளது.

    நவம்பர் முழுவதும்

    நவம்பர் முழுவதும்

    இந்நிறுவனம் தற்போது விபிஎஃப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அனைத்து புதிய திரைப்படங்களுக்கும் நவம்பர் மாதம் முழுவதற்கும் பொருந்தும். கொரோனா நெருக்கடி காரணமாக சினிமாத்துறை மிகப் பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

    புதிய படங்களை வெளியிட முடியும்

    புதிய படங்களை வெளியிட முடியும்

    இதன்காரணமாக சினிமாவை சார்ந்த பல தொழில்கள் முடங்கியுள்ளன. இதனை மீட்பதற்காக கியூப் இந்த தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த விபிஎஃப் கட்டண தள்ளுபடி காரணமாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தீபாவளிக்கு புதிய படங்களை வெளியிட முடியும்.

    ஊக்கமளிக்கும்

    ஊக்கமளிக்கும்

    இறுதிக்கட்ட சினிமா பணிகளை செய்ய முடியாமல் தவிக்கும் திரைத்துறையில் பணிகளை மீண்டும் தொடங்க இது ஊக்கமளிக்கும். மேலும் கண்டென்ட் டெலிவரி மற்றும் நிர்வாகத்திற்கான கட்டணத்தை மட்டும் தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Qube announces 100% waiver of VPF for new movie releases to support producers abd exhibitors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X