"ராணி"யைப் பார்த்து பயந்தேன்.. அப்புறம் சரியாய்ருச்சு.. அனிகா சுவாரஸ்ய பேட்டி!
சென்னை : குயின் இணைய தொடரில் நடிக்கும் போது மிகவும் பயமாக இருந்தது என்று அனிகா தெரிவித்துள்ளார்.
நடிகை அனிகாவை நமக்கு அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தெரியும், அதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக அவர் பல மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். அனிக்கா குழந்தை நட்சத்திரமாக 'கத துடருனு' என்கிற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதற்கு பிறகு சில மளையாள படங்களில் அவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தன. இதையடுத்து அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்தார் இந்தபடத்தின் மூலம் இவர் பிரபலமானார்.
அதன்பின் இவர், நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் என்ற மலையாள படம் பெரிய வெற்றியை பதிவு செய்தது. அதன்பின் தொடர்ந்து நடித்து வந்த அனிகா மலையாளத்தில் நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் மேலும் அதே நேரத்தில் தமிழிலும் நல்ல படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் பத்தாம் வகுப்பு முடித்து இருக்கிறார் .

குட்டி பெண்ணாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகாவை இந்த இணைய தொடரின் மூலம் ஒரு இளம்பெண்ணாக காட்டியிருப்பார்கள் குயின் இயக்குனர்கள் .

தற்போது அனிகா குயின் இணைய தொடர் வெற்றியை அடுத்து சில தனியார் ஊடங்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். அதில் சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து இருக்கிறார் அனிகா, அதில் தனது பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு முன்னர் தான் குயினில் நடித்து இருந்ததாகவும் கூறியிருந்தார் மிகுந்த பயத்துடனே குயினில் நடித்திருந்தாகவும் கூறியிருந்தார் ஏனெனில் அது ஒரு பெரிய போரளியின் கதை என்பதால் அந்த பயம் எனக்கு இருந்தது என்று கூறியுள்ளார்.
அதனை தாண்டி தன் வீட்டை தானே சுத்தம் செய்து வைத்து கொள்வதாகவும் கூறியிருந்தார் . அனிகாவின் இல்லம் கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கிறது. அங்கிருந்தே தனது பள்ளி படிப்பை படித்து வருகிறார் அனிகா அதே நேரத்தில் நடிப்பிலும் அசத்தி வருக்கிறார். எதிர்காலத்தில் அனிகா மிக பெரிய நாயகியாகவும் வர வாய்ப்பு உண்டு அதற்கு முதல் படி இவரின் குயின் என்று சொல்லலாம்.


Click it and Unblock the Notifications