96 வயதில் நடித்து அசத்திய இரண்டாம் எலிசபெத் ராணி.. பேடிங்டன் பியருடன் என்னவொரு பர்ஃபார்மன்ஸ்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: இங்கிலாந்து நாட்டின் அரசியான இரண்டாம் எலிசபெத் ராணி 70 ஆண்டுகளாக சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளதை அந்த நாடே கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், தனது நடிப்புத் திறமையையும் நாட்டு மக்களுக்கு காட்டி ஆச்சர்யத்தை அளித்துள்ளார் இரண்டாம் குயின் எலிசபெத்.

பேடிங்டர் பியர் எனும் படத்தில் வரும் கரடி பொம்மையுடன் அமர்ந்து டீ சாப்பிடும் காட்சிகள் அந்த குறும்படத்தில் இடம்பெற்றுள்ளது.

96 வயது

96 வயது

இங்கிலாந்து நாட்டின் அரசியான இரண்டாம் குயின் எலிசபெத்துக்கு 96 வயதாகிறது. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான பேடிங்டன் பியர் படத்தில் வரும் அனிமேஷன் கரடி உடன் அவர் அமர்ந்து தேநீர் அருந்துவதை போன்ற ஒரு வீடியோ வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது.

பிளாட்டினம் ஜூபிளி

பிளாட்டினம் ஜூபிளி

இரண்டாம் குயின் எலிசபெத் தனது 70வது ஆண்டு சிம்மாசன வாழ்க்கையை பிளாட்டினம் ஜூபிளியை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டுத் தான் இப்படியொரு குறும்படத்தை தயார் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படியொரு புதுமையான முயற்சியை சர்வதேச ரசிகர்கள் ஆச்சர்யம் கலந்து பார்த்து வருகின்றனர்.

பேடிங்டன் பியருக்கு பல்பு

பேடிங்டன் பியருக்கு பல்பு

தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பேடிங்டன் பியர் தனது தொப்பியில் இருந்து ரொட்டி ஒன்றை தேநீரில் நனைத்து சாப்பிட எடுத்துக் கொடுக்க, அதற்கு பல்பு கொடுக்கும் விதமாக தனது கருப்பு நிற ஹேண்ட் பேக்கில் இரண்டாம் குயின் எலிசபெத் ஒரு பெரிய ரொட்டித் துண்டை எடுத்து எங்கிட்டையே இருக்கு என சொல்லும் காட்சிகளும், இவர்களின் உரையாடலை திரையில் கண்டு கொண்டாடும் நாட்டு மக்களின் ரியாக்‌ஷன்களும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் கொண்டாட்டம்

இரண்டாம் குயின் எலிசபெத் கடந்த 70 ஆண்டுகளாக அரசியாக திகழ்ந்து வரும் நிலையில், பிளாட்டினம் ஜூபிளி விழாவை நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நூற்றாண்டை கடந்து குயின் எலிசபெத் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் மக்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X