குயின் பற்றி ஒரு சுவாரஸ்யமான கேள்வியை கேட்ட கார்த்திக் சுப்புராஜ்

சென்னை : ஜூன் 19 அன்று குயின் திரைப்படம் ஆன்லைனில் வெளியிடுவதை அந்த திரைப்படக் குழு சில மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் டீசர் வரும் ஜூன் 8 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கிறது.

இதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கார்த்திக் சுப்புராஜ் குயின் போஸ்டரில் இருந்து ஒரு சுவாரசியமான கேள்வி ஒன்றை கேட்டிருக்கிறா

 நடிப்பு குயின்

நடிப்பு குயின்

தொடர்ந்து ஹீரோயின் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் முதன்முதலாக கதையின் ஹீரோவாக நடித்த நடிகையர் திலகம் திரைப்படம் வெற்றியானதை தொடர்ந்து இவர் இப்போது குயின் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார். இதன் வெளியீட்டு தேதி அறிவித்ததில் இருந்து நாளுக்குநாள் எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகமாகிக்கொண்டே போகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது.

 கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடித்திருப்பதால் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இவர் இன்று குயின் படத்தின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதில் குடை பிடித்துள்ள நபர் யார் என்று தனது ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இதுவரை குயின் படத்தில் கீர்த்தி சுரேஷின் முகம் மட்டுமே கட்டப்பட்டு வந்த நிலையில் இப்போது இவர் எழுப்பியுள்ள கேள்வி பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

 ஜகமே தந்திரம்

ஜகமே தந்திரம்

இந்தக் கேள்விக்கு பலரும் பலவிதமான பதில்களை அளித்து வந்த நிலையில், இதற்கு பதிலாக பலரும் அந்த குடைபிடித்து நபர் ஸ்டார் ரஜினிகாந்த் என கூறிவருகின்றனர். இன்னும் சிலர் தனுஷ் நடித்து இவர் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் என்ற படத்தின் அப்டேட் எங்கே என்று கேள்விகளை கேட்டு வந்துள்ளனர்.

 குடை பிடித்த நபர்

குடை பிடித்த நபர்

இன்னும் சிலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று அன்பு கட்டளை போட்டுள்ளனர். அவர் கேட்ட கேள்விக்கு சரியான பதில் யாருக்கும் தெரியாத நிலையில் பலரும் குழம்பி வருகின்றனர். வரும் ஜூன் எட்டாம் தேதி இந்த படத்திற்கான டீசர் வெளியாக உள்ள நிலையில் அன்று கண்டிப்பாக அந்த குடை பிடித்த நபர் யார் என தெரியவரும் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

 அப்டேட் எங்கே

அப்டேட் எங்கே

பேட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்து தனுஷை வைத்து இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம் இந்த படத்தின் போஸ்டர் மட்டும் வெளியான நிலையில் இன்னும் அதைப்பற்றி அப்டேட் இவர் எதுவுமே கொடுக்காததால் தனுஷின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X