twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குயின் வெப் சீரிஸ்க்கு சிங்கப்பூரில் கிடைத்த விருது.. மகிழ்ச்சியில் படக்குழு!

    |

    சென்னை : பல ஆண்டுகளாக நீலாம்பரியாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு ராஜ மாதாவாக மாறியுள்ளார்.

    சிறந்த நடிகையான ரம்யா கிருஷ்ணன் பாகுபலி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமான குயின் வெப் சீரிஸில் நடித்ததை அடுத்து அது பிரபல எம் எக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

    பல்வேறு பாகங்களாக வெளியான குயின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இப்பொழுது சிங்கப்பூரில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த வெப்சீரிஸ் என விருது வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.

    நடிப்பதில் மிகுந்த கவனம்

    நடிப்பதில் மிகுந்த கவனம்

    மனதை வருடும் காதல் திரைப் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சமீபகாலமாக வெப்சீரிஸ் இயக்குவதிலும் நடிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார்.

    வெளியிட முடியாமல்

    வெளியிட முடியாமல்

    எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கி வந்த துருவ நட்சத்திரம் மற்றும் ஜோஸ்வா இமைபோல் காக்க போன்ற திரைப்படங்கள் பண நெருக்கடி காரணமாக இன்று வரை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

    கிளைமாக்ஸ் காட்சியில்

    கிளைமாக்ஸ் காட்சியில்

    இவ்வாறு தனது திரைப்படங்களை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்த போதிலும், ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் கௌதம் மேனன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் அனைவரும் அசந்து போகும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதோடு கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரின் கண்களிலும் நீர் வர வர சிரிக்க வைத்திருந்தார்.

    பாவக்கதைகள்

    பாவக்கதைகள்

    கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து இப்பொழுது பாவக்கதைகள் வெப் சீரிஸில் ஒரு பாகத்தை இயக்கி நடித்தும் உள்ளார்

    ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்

    ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்

    மேலும் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான குயின் வெப்சீரிஸ் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மறைந்த முதல்வர் ஜெ ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவான குயின் வெப் சீரிஸ் பல்வேறு பாகங்களாக அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவானது. குயின் வெப் சீரிஸில் சிறு வயது ஜெயலலிதாவாக விஸ்வாசம் புகழ் அனிகா சுரேந்திரன் நடித்திருக்க, நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தி இருந்தார்.

    பிரபலங்கள் பாராட்டு

    பிரபலங்கள் பாராட்டு

    ஜெயலலிதாவை அப்படியே உரித்து வைத்தது போல் ஒரு சாயலில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் குயின் வெப் சீரிஸில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இவரின் நடிப்பை பாராட்டிய பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்கள் கூறி வர இப்பொழுது சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கப்பூர் ஏசியன் அகாடமி கிரியேட்டிவ் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் குயின் வெப்சீரிஸுக்கு உண்மை கதையை மையமாக கொண்டு உருவான சிறந்த வெப் சீரிஸ் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இதனை ரம்யா கிருஷ்ணன் கௌதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வர பிரபலங்கள் பலரும் படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Queen Web Series win International award
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X