மிருணாள் தாகூருடனான காதல்?.. வீட்டில் சம்மதம் வாங்கிவிட்டாரா தனுஷ்?.. தந்தை பிறந்தநாளில் குட் நியூஸ்?

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான குபேரா திரைப்படம் ஓரளவுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பை பெற்றது. அதேசமயம் தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டடித்தது. அடுத்ததாக அவரது நடிப்பில் தேரே இஷ்க் மெய்ன் என்ற ஹிந்தி படம் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவரும் நடிகை மிருணாள் தாகூரும் காதலித்துவருவதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்திய திரைத்துறையில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தனுஷ். பிரபல நடிகர் மட்டுமின்றி சிறந்த நடிகர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார். அவர் கடைசியாக சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்தார். அப்படம் தமிழில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் தெலுங்கில் சூப்பர் வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழில் இட்லி கடை படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது.

பெர்சனல் வாழ்க்கை: இதற்கிடையே ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை இரண்டு பேருக்குமிடையே மனஸ்தாபம் ஆரம்பித்தது. அது காலப்போக்கில் சரியாகிவிடும் என்றுதான் குடும்பத்தினர் பார்த்தார்கள். ஆனால் நாளாக நாளாக அந்த மனஸ்தாபம் பெரிதாகி பிரிவை அறிவித்தார்கள்.

குடும்பத்தினரின் முயற்சி: அவர்கள் பிரிந்தாலும் விவாகரத்து மனு தாக்கல் செய்யாமல் இருந்தார்கள். எனவே அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தார்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள். இருப்பினும் பிடி கொடுக்காத அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்று சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுவிட்டார்கள். இரண்டு மகன்களான யாத்ரா, லிங்காவை கோ பேரண்ட்டிங் முறையில் வளர்க்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Question Raises Dhanush s family has consented to his relationship with Mrunal Thakur
Photo Credit:

புதிய காதல்?: நிலவரம் இப்படி இருக்க கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது தனுஷும், நடிகை மிருணாள் தாகூரும் காதலித்துவருவதாகவும்; விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் மிருணாளுக்கு நெருக்கமான ஒருவர் கூறியிருக்கிறார். தனுஷுக்கு வயது 42 என்பதும், மிருணாள் தாகூருக்கு வயது 33 என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

மிருணாள் செய்த செயல்: இந்நிலையில் மிருணாள் தாகூர் செய்திருக்கும் செயல் ஒன்று பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதாவது தனுஷின் சகோதரிகளான கார்த்திகா, விமல கீதா ஆகியோரை தனுஷுடனான காதல் கிசுகிசு கிளம்பும்வரை இன்ஸ்டாகிராமில் மிருணாள் ஃபாலோ செய்யவில்லை. இப்போது அவர்களை ஃபாலோ செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களும் பதிலுக்கு ஃபாலோ செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விஷயமும் திரைத்துறையில் பெரிய பேசுபொருளாகியிருக்கிறது.

தந்தையின் பிறந்தநாள்: மேலும், இதனை கவனித்த ரசிகர்களோ, மிருணாள் தாகூரை தனது குடும்பத்துக்கு அறிமுகப்படுத்தி தங்கள் காதலை தனுஷ் சொல்லிவிட்டதால்தான் இந்த செயல் நடந்திருக்குமோ என்று கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி இன்று கஸ்தூரி ராஜாவின் பிறந்தநாள். இன்றைய நாளில் இந்த விஷயம் நடந்திருப்பதால்; தந்தை பிறந்தநாள் அன்று தனுஷின் வீட்டில் நல்ல காரியம் நடப்பதற்கான அறிகுறி தெரிந்திருப்பதாகவும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் இந்தக் காதல் கிசுகிசு குறித்து தனுஷ், மிருணாள் இதுவரை அமைதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X