குஷ்புவுக்கு கொரோனா... டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பாதிப்பு வருமா ?

சென்னை : நடிகையும், அரசியல் பிரபலமுமான குஷ்பு, தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனால் சமீபத்தில் அவர் கலந்து கொண்ட டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு பாதிப்பு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக கோலிவுட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் திரையுலகை சேர்ந்த பலரும் கலக்கத்தில் உள்ளனர். சத்யராஜ், டி.பி.கஜேந்திரன் போன்றோர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சோபனாவுக்கு ஒமைக்ரான்

சோபனாவுக்கு ஒமைக்ரான்

இந்நிலையில் இன்று நடிகை சோபனா தனக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து நடிகை குஷ்புவும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

குஷ்புவுக்கு கொரோனா

குஷ்புவுக்கு கொரோனா

கடந்த இரண்டு அலைகளில் தப்பிய நிலையில் மூன்றாவது அலையில் கொரோனாவிடம் சிக்கிக் கொண்டதாகவும், முதல் நாள் வரை கொரோனா நெகடிவாக இருந்த நிலையில், சில அறிகுறிகள் இருந்ததால் மீண்டும் சோதனை செய்த போது கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வீட்டு தனிமையில் இருக்கும் தனக்கு தனிமை பிடிக்கவில்லை. அனைவரும் அடுத்த சில நாட்களுக்கு தன்னை என்டர்டைன் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வலிமை நாயகி ஹுமா குரேஷி, குஷ்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டான்ஸ் நிகழ்ச்சியில் குஷ்பு

டான்ஸ் நிகழ்ச்சியில் குஷ்பு

இதற்கிடையில் கலர்ஸ் தமிழ் சேனலில் குஷ்பு, டான்ஸ் Vs டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த ரியாலிட்டி ஷோவின் நடுவர்களாக குஷ்புவும் பிருந்தா மாஸ்டரும் இருந்தனர். இதன் கிராண்ட் ஃபினாலே நேற்று நடைபெற்றது. இதற்கான ஷுட்டிங் இரண்டு நாட்களுக்கு முன் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மற்றொரு விருந்தினராக கலா மாஸ்டரும் கலந்து கொண்டார்.

Recommended Video

Omicron 5 New Symptoms | AIIMS Delhi | Oneindia Tamil
பாதிப்பு வருமா

பாதிப்பு வருமா

தற்போது குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும், ஷுட்டிங்கின் போது செட்டில் இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக சோதனை செய்து தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X